PAN-Aadhaar Linking: மார்ச் 31 கடைசி...PAN-Aadhaar இணைப்பது எப்படி?
பான் - ஆதார் இணைப்புக்கு ஏற்கெனவே இரண்டு முறை கால அவகாச நீட்டிப்பு கொடுக்கப்பட்டிருப்பதால், இனியும் கால அவகாசம் தரப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது!
புதுடெல்லி: கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகக் கடந்த 2020-ம் ஆண்டில் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில், வரி செலுத்துவது, கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்தது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில், பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக சொல்லப்பட்டிருந்தது.
ஆதார் கார்டையும் (Aadhaar Card), பான் கார்டையும் (PAN Card) 2020 மார்ச் 31-க்குள் இணைக்காமல் விட்டுவிட்டால், அவரின் பான் எண்ணை வருமான வரித்துறை செயலிழக்கச் செய்துவிடும் (Deactivate). எப்போது அவர் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைக்கிறாரோ அப்போதுதான் அவரின் பான் எண் செயல்படுத்தப்படும் (Activate).
ALSO READ: UIDAI: Aadhaar எங்கே, எவ்வளவு பயன்படுத்தப்பட்டது? உடனடியாக சரிபார்க்கவும்!
ஆன்லைனில் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பது எப்படி
* முதலில் ஆன்லைனில் www.incometaxindiaefiling.gov.in என்ற வருமான வரித்துறை இணையதளத்தைத் திறக்கவும்.
* அதன் முகப்புப்பக்கத்தில் இடது ஓரத்தில் `Link Aadhaar' என்ற மெனுவைக் காணலாம். அந்த மெனுவைக் கிளிக் செய்யவும். அதற்கான பக்கம் திறக்கும்.
* அதில் பான் கார்டு எண் கேட்கப்பட்டிருக்கும். உங்கள் பான் கார்டு எண்ணைப் பதியவும். அடுத்து ஆதார் எண் கேட்கப்பட்டிருக்கும். அதையும் பதியவும். அடுத்து, ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்கள் பெயரைப் பதியவும். அடுத்து ஒரு கிளிக் பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும்.
* உங்களுடைய ஆதார் கார்டில் மட்டுமே பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த பட்டனைக் கிளிக் செய்யவும். அதார் எண்ணையும் பான் கார்டையும் இணைப்பதற்கான அனைத்து விவரங்களையும் கொடுத்தாயிற்று.
* அடுத்ததாக, வழக்கம்போல் `கேப்சா கோட்' செக்கிங் வைத்திருப்பார்கள். அதைச் சரியாகக் கொடுத்ததும் `Link Aadhaar' பட்டனைக் கிளிக் செய்யவும்.
* கொடுத்துள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், வெற்றிகரமாக ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கப்பட்டதாகச் செய்தி வரும்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR