இனி இதற்கெல்லாம் பான் அட்டை தேவையில்லை... பட்ஜெட்டில் வருகிறது அப்டேட்!
வங்கி பணி பரிவர்த்தனைகளில் பான் அட்டை பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், குறிப்பிட்ட கணக்குகளுக்கு அவை தேவையில்லை என வங்கிகள் நீண்ட நாள்களாக கூறிவருகின்றன.
வரவிருக்கும் மத்திய பட்ஜெட் 2023-24 இல், ஆதார் இணைப்புடன் உள்ள நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் அட்டை இணைப்பு தேவையை நீக்க நிதி அமைச்சகம் முன்மொழிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கோரும் விதிகளை எளிமையாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, பான் அட்டை இணைப்புகள் இல்லாத நிதிப் பரிவர்த்தனைகளுக்கு, வருமான வரிச் சட்டத்தின் 206AA பிரிவின்படி, பொருந்தக்கூடிய விகிதம் குறைவாக இருந்தாலும், மூலத்தொகையில் இருந்து 20 சதவீதம் வரியாக (TDS) எடுத்துக்கொள்ளப்படும்.
சில வங்கிகள் தற்போதைய முறையால் ஏற்படும் தேவையற்ற குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றன.
அனைத்து வங்கிக் கணக்குகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து தனிப்பட்ட கணக்குகளும் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் கூறுகின்றன. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139A(5E), சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டுக்குப் பதிலாக ஆதார் எண்ணை வழங்க பயனர்களை அனுமதிக்கிறது என்றும் அவர் கூறுகின்றனர்.
இந்த விஷயத்தில் குறிப்பிட்ட வரம்பைக் குறிப்பிட்டு அதனை வரையறை செய்யலாம் என்றும் அந்த வரையறைக்குள் பான் தேவையில்லை என்றும் அதிகாரிகள் யோசனை தெரிவித்தார். பிரிவு 206AA, மூலத்தொகையில் இருந்து எடுக்கப்படும் வரிகளு்கு சரியான விகிதத்தில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்கிறது. குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் தங்கள் பான் கார்டுகளை மேற்கோள் காட்டாத நிறுவனங்கள் அல்லது தனிநபர்களால் வரி ஏய்ப்பைத் தடுக்கிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இந்த விஷயத்தில் தெளிவுபடுத்துவது, பான் அட்டை வழங்கத் தேவையில்லாதவர்களுக்கு உதவக்கூடும், ஆனால் சில பரிவர்த்தனைகளைச் செய்யும்போது அதிக வரி விலக்குகளை எதிர்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ