Pan Card link: பான் கார்டு இந்தியாவில் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. நிதி பரிவர்த்தனை முதல் தனிநபர் அடையாளச் சான்று வரை என அனைத்திற்கும் ஆவணமாக இருக்கும் பான்கார்டு குறித்து பல்வேறு அப்டேட்டுகளை மத்திய அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதனை மக்கள் சரியாக செய்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. இல்லையென்றால், பான்கார்டு வைத்திருந்தாலும் எந்த பிரயோஜனமும் இருக்காது. அதாவது, ஆதார் கார்டு எண்ணுடன் பான் கார்டு இணைக்க வேண்டும். இல்லையென்றால் பான்கார்டு தானாகவே செயலிழந்துவிடும்.     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பான் கார்டு 


Pan (நிரந்தர கணக்கு எண்) என்பது இந்தியாவில் உள்ள அனைத்து வரி செலுத்துவோருக்கும் வழங்கப்படும் அடையாள எண். பான் என்பது ஒரு மின்னணு அமைப்பாகும். இதன் மூலம் தனிநபர்/நிறுவனத்திற்கான அனைத்து வரி தொடர்பான தகவல்களும் ஒரே பான் எண்ணில் பதிவு செய்யப்படும். இது தகவல்களைச் சேமிப்பதற்கான முதன்மைத் திறவுகோலாகச் பான் கார்டு செயல்படுகிறது. நாடு முழுவதும் பகிரப்படுகிறது.


மேலும் படிக்க | Pan - Aadhar Link: மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்


பான் கார்டு - ஆதார் அட்டை இணைப்பு


இந்நிலையில் தற்போது பான் கார்டு தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது மிகவும் முக்கியம். பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க பலமுறை வருமான வரித்துறையினரால் கேட்கப்பட்டது. இன்னும் பலர் ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்கவில்லை.



பான் கார்டு செயலிழப்பு


அரசு பலமுறை அறிவுறுத்தியும் பான்கார்டு உடன் ஆதார் கார்டை இணைக்காதவர்களின் பான் கார்டு தானாகவே செயலிழந்துவிடும். இது தொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், " வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு அளிக்கப்பட்ட பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 31.03.2023-க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். 01.04.2023 முதல் ஆதாருடன் இணைக்கப்படாத பான்கள் செயலிழந்துவிடும்" என தெரிவித்துள்ளது.


 


மேலும் படிக்க | PAN Aadhar Link: இவர்களெல்லாம் பான் கார்டு ஆதாருடன் இணைக்க தேவையில்லை...!


மேலும் படிக்க | ஆதார்-பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?


மேலும் படிக்க | ஆதார் - பான் இணைப்பு: லட்சக்கணக்கானோருக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு..!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ