ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை வாழ்க்கையில் மிகவும் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கு மிக தேவையான விஷயம் தன்னம்பிக்கை. உங்கள் குழந்தை சிறுவயது முதலே தன்னம்பிக்கையுடன் இருந்தால், எதிர்காலத்தில் அவர் நிச்சயமாக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வார்கள். ஒரு சிறு குழந்தையை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பதில் பெற்றோர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். குழந்தைப் பருவத்திலேயே குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க பெற்றோர்கள் முயற்சி செய்தால், பின்னர் அவர்கள் வெற்றிகரமான, தன்னம்பிக்கையான, அச்சமற்ற மற்றும் தைரியமான இளைஞர்களாக உருவெடுப்பார்கள். உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் இருப்பதற்காக நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களை இன்று அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'இல்லை' என்று சொல்ல குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்


ஒருவேளை நம்மில் பலருக்கு எல்லாவற்றுக்கும் சரி என ஒத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கலாம், இதன் காரணமாக இன்றும் கூட நாம் விரும்பாவிட்டாலும் சில பணிகளை மறுக்க முடியாமல் செய்யும் நிலைக்கும் ஆளாகி இருப்போம். அந்த பழக்கம் சரியானது அல்ல. குழந்தை பருவத்திலிருந்தே தங்கள் எல்லைகளை சரியாக அமைக்க அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு வேலையை செய்ய விருப்பம் இல்லை என்றாலோ அல்லது அந்த வேலை சரியில்லை என்று நினைத்தாலோ அதனை மறுக்கலாம் என்பதை கற்றுக் கொடுங்கள். இது மிகவும் முக்கியமான வாழ்க்கைத் திறன், இது பிற்கால வாழ்க்கையில் பயனுள்ளதாக (Parenting Tips) இருக்கும்.


குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசி, அவர்கள் தங்களை அறிந்து கொள்ள உதவுங்கள்


தினமும் சிறிது நேரம் உங்கள் குழந்தையுடன் அமர்ந்து நேரத்தை செலவிடுங்கள். அவர்களின் பலம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளை கணிதத்தில் திறமையானவராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஓவியத்தில் அவர் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்கலாம். அதற்காக அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கவும். கணக்கில் சரியாக மதிப்பெண் வாங்கவில்லை என மட்டம் தட்டாமல், உங்கள் குழந்தையின் திறன்களை நீங்கள் மேம்படுத்த வேண்டும். அவர்களிடம் பேசி, அவர்க பல திறமைகள் கொண்டவர்கள் என்பதைச் சொல்லி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.


மேலும் படிக்க | எதெற்கெடுத்தாலும் கத்தும் குழந்தைகளை கையாள்வது எப்படி..!!


அவர்கள் தவறுகளை உணர்ந்து கொண்டு, அதனை திருத்திக் கொண்டு முன்னேற உதவுங்கள்


பல சமயங்களில், குழந்தைகள் சில தவறுகளைச் செய்யும்போது, ​​பெற்றோர்கள் அவர்களைக் கடிந்து கொள்வதில் குறியாக இருக்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு தவறை செய்தால் அதை மீண்டும் திட்டு வாங்க வேண்டி வரும் என்ற அச்சம் குழந்தையின் மனதில் ஏற்படுகிறது. இங்கிருந்து தான் அவர்கள் தங்கள் தவறுகளை மற்றவர் மீது பழி போடவும் பொய் சொல்லவும் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் வளர்ந்தாலும், அவர்களின் அதே பழக்கம் தொடர்கிறது. இது வாழ்க்கையில் நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உங்கள் பிள்ளைகளின் தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் சொல்லிக் கொடுங்கள். தவறு செய்வது சகஜம், எல்லோரும் தவறு செய்வார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.


கடின உழைப்பின் முக்கியத்துவத்தை புரிய வையுங்கள்


உங்கள் குழந்தை ஏதாவது விரும்பினால், கடின உழைப்பின் உதவியுடன் தான் அதை அடைய முடியும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லுங்கள். இது மிகவும் சாதாரண விஷயம்  போல் தோன்றலாம் ஆனால் இது மிகவும் முக்கியமானது. குழந்தைப் பருவத்தில் நாம் எது சொன்னாலும் மனதில் நன்றாக பதியும் காலம். ஒரு குழந்தை தனது கடின உழைப்பில் ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கை வைத்து வளர்ந்தால், பின்னர் அவர் ஒரு நம்பிக்கையான இளைஞராக மாறுகிறார். குழந்தைக்கு தன்னம்பிக்கை வளர உதவுங்கள்.


மேலும் படிக்க | பெற்றோர்கள் கவனத்திற்கு! இந்த தவறை நீங்கள் செய்தால் குழந்தைகள் பிரிந்துவிடுவார்கள்!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ