எதெற்கெடுத்தாலும் கத்தும் குழந்தைகளை கையாள்வது எப்படி..!!

குழந்தைகள், ​​பெற்றோரிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாத, அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் பெற்றோரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய சில செயல்களைச் செய்கிறார்கள். சில சமயங்களில், தன் கருத்தை வெளிப்படுத்தவோ அல்லது கோபத்தின் காரணமாகவோ, சில குழந்தைகள் கத்தத் தொடங்குகிறார்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 23, 2024, 10:49 AM IST
  • சில சமயங்களில், தன் கருத்தை வெளிப்படுத்தவோ அல்லது கோபத்தின் காரணமாகவோ, சில குழந்தைகள் கத்தத் தொடங்குகிறார்கள்.
  • குழந்தையிடம் கத்தாமல் மெல்லிய குரலில், அதே சமயம் உறுதியாக பேசினால், அவர்களும் உங்களைப் பார்த்து கற்றுக் கொள்வார்கள்.
எதெற்கெடுத்தாலும் கத்தும் குழந்தைகளை கையாள்வது எப்படி..!! title=

உங்கள் பிள்ளை பள்ளியிலும் மற்ற போட்டிகளிலும் முதலிடம் பெறலாம், ஆனால் அவருடைய சில பழக்கவழக்கங்கள் அனைவரையும் எரிச்சல் படுத்துவதாக இருக்கலாம். குழந்தைகள், ​​பெற்றோரிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாத, அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் பெற்றோரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய சில செயல்களைச் செய்கிறார்கள். சில சமயங்களில், தன் கருத்தை வெளிப்படுத்தவோ அல்லது கோபத்தின் காரணமாகவோ, சில குழந்தைகள் கத்தத் தொடங்குகிறார்கள். 

குழந்தைகளை வளர்ப்பது, எந்த பெற்றோருக்கும் சாதாரண காரியம் அல்ல. அதில்ம் சவால்கள் பல உள்ளன. பல பெற்றோர்களுக்கு அவர்களின் குழந்தைகள் அறிவாளியாக மட்டுமின்றி நல்ல குழந்தைகளாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்கான வளர்ப்பு முறை என்னவென்று தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்காகவே சில ஸ்பெஷலான டிப்ஸ், இதோ. 

குழந்தைகளின் இத்தகைய நடத்தை பெற்றோரை மட்டுமல்லாது, அருகில் இருப்பவர்களையும் தொந்தரவு செய்யலாம். உங்கள் குழந்தையும் இப்படி நடந்து கொண்டால் சில வழிமுறைகளை பின்பற்றி அதை சமாளிக்க வேண்டும்.

உங்கள் குரலை உயர்த்த வேண்டாம்

உங்கள் கத்தும் குழந்தையின் முன் நீங்கள் சத்தமாக கத்தினால், அவர் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டு மேலும் சத்தமாக கத்துவார். குழந்தையின் கண்களைப் பார்த்து அவருடன் பேசுங்கள். குழந்தையிடம் கத்தாமல் மெல்லிய குரலில், அதே சமயம் உறுதியாக பேசினால், அவர்களும் உங்களைப் பார்த்து கற்றுக் கொள்வார்கள்.

மேலும் படிக்க | துரித உணவை அதிகம் சாப்பிடும் குழந்தைகளை கட்டுப்படுத்துவது எப்படி...!

அலறல்களுக்கு பதிலாக சிரிப்பு

உங்கள் குழந்தை சிரிக்கும்போது அழுவது கடினம். அத்தகைய சூழ்நிலையில், குழந்தை கோபமாக இருக்கும்போது அல்லது சத்தமாக கத்தினால், அவருடன் பதற்றப்படாமல், வேடிக்கையாக பேசி, சமாதாமாக இருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் குழந்தையின் கவனத்தை சிறிது நேரம் திசை திருப்பி அலறுவதை நிறுத்தலாம்.

குழந்தையின் கோபத்திற்கான காரணத்தை அறிதல்

உங்கள் குழந்தை பசியுடன் இருக்கும்போது கத்த ஆரம்பிக்கிறது என்று உங்களுக்குத் தெரிந்தால், சரியான நேரத்தில் அவர்களுக்கு உணவளிக்கவும். நீங்கள் வெளியே செல்ல அல்லது உணவு நேரத்தில் ஏதாவது வேலை செய்ய திட்டமிட்டிருந்தால், உணவுப் பொருட்கள் அல்லது தின்பண்டங்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

ஒரு மனிதன் எப்படி வளர்கிறான் என்பது, அவனது குழந்தை பருவத்தை வைத்தே அமையும் என்று முன்னோர்கள் கூறுவர். குழந்தைகள், நல்ல பிள்ளைகளாக வளர்வது பெற்றோர்கள் கையில் தான் உள்ளது. அவர்களை வளர்க்கும் முறை பொருத்தே அவர்கள் பழக்க வழக்கம் இருக்கும். குழந்தைகள், களிமண் போன்றவர்கள் அவர்களுக்கு நாம் ஒரு உருவம் கொடுக்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க |  உங்க 5 வயது குழந்தைக்கு ‘இதெல்லாம்’ கட்டாயம் தெரிஞ்சிருக்கணும்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News