குழந்தைகளின் தவறை அடிக்காமல்-திட்டாமல் அன்பாய் சரி செய்யலாம்! ‘இந்த’ ட்ரிக்ஸ் போதும்..
Parenting Tips To Discipline Children : சில குழந்தைகளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பெற்றோர்கள் திணருவர். அவர்களுக்கான சில டிப்ஸ், இதோ.
Parenting Tips To Discipline Children : குழந்தைகள் என்பவர்கள், சிறிய அளவிளான இருக்கும் மனிதர்கள்தான். இவர்கள்தான், அடுத்த சமுதாயத்தை உருவாக்குபவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் செய்யும் குறும்புத்தனம் பல சமயங்களில் ரசிக்க வைக்கும் படி இருந்தாலும், சில சமயங்களில் அவர்களை சமாளித்து வரும் பெற்றோர்களுக்கு எரிச்சலை கிளப்பும். இதனால் அவர்கள் ஆயுதத்தை கையில் எடுத்து எப்போதாவது அடிப்பதுண்டு. அல்லது, கடும் சொற்களால் குழந்தைகளை திட்டுவதுண்டு. இது, பிள்ளைகளுக்கு ஆறாத வடுவாக மாறுவதோடு, நீண்ட நாட்கள் மறக்க முடியாத ஒன்றாகவும் ஆகி விடும். அதே போல, பெற்றோர்களுக்கும் ‘அய்யோ இப்படி செய்து விட்டோமே..’ என்ற குற்ற உணர்ச்சியும் ஏற்படலாம். எனவே, அவர்களை அன்பாய் சமாளிக்க சில டிப்ஸ். அவை என்ன தெரியுமா?
எதிர்பார்ப்புகளை தெரிவிக்க வேண்டும்:
பெற்றோர்கள், குழந்தைகளிடத்தில் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். அதை தெளிவாகவும் எளிமையாகவும் தெரிவித்து விட வேண்டும். உங்கள் குழந்தைகள் செய்வது தவறு என்றால், அதை அப்போதே அவர்களிடத்தில் கூறி விட வேண்டும்.
பாராட்டுங்கள்:
உங்கள் குழந்தைகள் நன்றாக செயல்படும் போது அவர்களின் அந்த நல்ல நடவடிக்கைகளுக்கு நீங்கள் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். ஒரு சாக்லேட் வாங்கி கொடுப்பது, “சூப்பர். குட் பாய்/குட் கேர்ள்” என்று பாராட்டுவது போன்றவற்றை செய்யலாம்.
அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கொண்டிருப்பதை தவிர்த்து, அவர்களிடம் இருக்கும் நல்லதையும் பாராட்டலாம். இதனால் அவர்கள் தங்களை தாங்களே திருத்திக்கொள்வார்கள்.
சாய்ஸ் கொடுங்கள்:
குழந்தைகளை, அவர்களது இடத்தை சுத்தம் செய்ய வைக்க வேண்டும் என்றால், “இப்போ சுத்தம் செய்கிறாயா? அல்லது 5 நிமிடம் கழித்து சுத்தம் செய்கிறாயா?” என்று கேட்க வேண்டும். அப்போது அவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை மனதில் ஏற்றிக்கொள்வார்கள்.
பின்விளைவுகளை தெரிவியுங்கள்:
குழந்தைகளுக்கு அவர்கள் செய்யும் நடவடிக்கைகளுக்கு என்னென்ன பின்விளைவுகள் வரும் என்பதை தெரிவிக்க வேண்டும். உதாரணத்திற்கு அவர்கள், தங்களின் பொம்மைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி வைக்கவில்லை என்றால், அது பின்னர் அந்த இடத்தில் இருக்காது என்பதை தெரிவிக்க வேண்டும். இது அவர்களுக்கு பொறுப்புணர்வை தூண்டும்.
அவர்கள் கூடவே இருங்கள்:
உங்கள் குழந்தைகள் தவறு செய்து, அதை உணரும் போது அவர்கள் உணர்வுகளுடன் கூடவே இருங்கள். அவர்களை தனிமைப்படுத்தி விடுவதற்கு பதிலாக நீங்கள் அவர்கள் கூடவே இருந்தால், எதையும் கடந்து வரலாம் என அவர்களுக்கு தோன்றும்.
அவர்கள் செய்வது எதனால் தவறு என்பதையும், இந்த தவறை அவர்கள் எப்படி சரி செய்து கொள்ளலாம் என்பதையும் நீங்கள் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
முன்மாதிரியாக இருக்க வேண்டும்:
குழந்தைகள், தங்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும் விஷயங்களை விட பார்க்கும் விஷயங்களையே எளிதாக கற்றுக்கொள்வார்கள். எனவே, அவர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வாறே நீங்கள் அவர்கள் எதிரில் நடந்து கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் தவறு செய்தால் அப்போது அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீங்கள் நினைப்பது போல, நீங்கள் தவறு செய்தாலும் அவர்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும்.
புரிந்துணர்வு:
குழந்தைகள் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் போது, அவர்களை நீங்கள் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இது, அவர்களுக்கு தனது உணர்வுகளை ஒருவர் கேட்ட உணர்வு ஏற்படுவதுடன், விரக்தி மனநிலையையும் விரட்ட உதவும்.
மேலும் படிக்க | குழந்தைகள் பொய் பேசினால் பெற்றோர்கள் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா !
மேலும் படிக்க | குழந்தைகள் கண் முன் பெற்றோர்கள் இந்த தவறை செய்யவே கூடாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ