பெற்றோர்கள் கவனத்திற்கு! குழந்தைகள் உங்களிடமிருந்து கொள்ளும் முக்கிய விஷயங்கள்!

பொதுவாக குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை அப்படியே உள்வாங்கி அதே போல நடக்கின்றன. பேசுவது, சிரிப்பது, சாப்பிடுவது என ஒவ்வொன்றையும் பெற்றோர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்கின்றன. 

 

1 /6

பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் நிதானமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் கொண்டு செல்ல வேண்டும்.  

2 /6

பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி அணுகுகிறார்களோ, அப்படி தான் குழந்தைகள் மற்றவர்களிடம் அணுகுவார்கள். எனவே தொடர்பு திறன் நன்றாக இருக்க வேண்டும்.  

3 /6

ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும் என்பதை குழந்தைகள் வீட்டில் இருந்து தான் கற்றுக்கொள்கின்றன. ஒரு செயலை எடுத்தால் செய்து முடிக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் தான் சொல்லி கொடுக்க வேண்டும்.   

4 /6

குழந்தைகளின் உணவுப் பழக்கம் பெற்றோர்களிடம் இருந்து தான் உருவாகிறது. எனவே வீட்டிலும், வெளியிலும் ஆரோக்கியமான உணவு முறைகளை சொல்லி கொடுக்க வேண்டும்.   

5 /6

சிறு வயது முதலே குழந்தைகளிடம் நிதி தொடர்பான அனைத்து விசயங்களையும் பழக்க வேண்டும். இது தான் பின்னாளில் அவர்களை கட்டுக்கோப்பாக கொண்டு வரும். நீங்கள் ஆடம்பரமாக செலவு செய்தால், குழந்தைகளும் அப்படியே செலவு செய்வார்கள்.   

6 /6

பெற்றோர்கள் தினசரி காலையில் எழுந்து சுறுசுறுப்பாக வேலைகளை செய்தால், குழந்தைகளும் அவற்றை பார்த்து கற்று கொள்வார்கள். இதன் மூலம் ஒழுக்கம் வளரும்.