ரயில் பயணம் தொடர்பாக Paytm புதிய அம்சங்களைச் கொண்டு வர இருக்கிறது. அவை அனைத்தும் ரயில் சேவை குறித்த அப்டேட்டுகளை பயணிகளுக்கு துல்லியமாக கொடுக்கும் பொருட்டு மேம்படுத்தப்பட்ட அம்சமாக இருக்கப்போகிறது. ஏற்கனவே, Paytm ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் அம்சம் உள்ளது. இப்போது அது தொடர்புடைய வசதிகளை விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பயணிகள் இப்போது தங்கள் பயணத்தின் PNR நிலையை Paytm-ல் கண்காணிக்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு பிரச்சனையில் இருந்து விடுபட உங்களுக்கான யோசனை


Paytm புதிய அப்டேட்


பயனர்கள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் Paytm பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்டதும், பட்டியலிடப்பட்டுள்ள இந்த அம்சங்களைக் கண்டறியலாம். என்னென்ன அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். 


Paytm லைவ் PNR நிலை 
- Paytm பயன்பாட்டிற்குச் சென்று ரயில் நிலையைத் தேடுங்கள்.
- அதில் 'ரயில்' விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இங்கே நீங்கள் PNR நிலை, நேரடி ரயில் நிலை, ரயில் காலண்டர் மற்றும் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்வதற்கான விருப்பம் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.
-  பின்னர், நீங்கள் ரயில் எண்ணை பதிவிட வேண்டும்.
- நீங்கள் தகவலை உள்ளிட்டதும், ரயிலின் வருகை நிலை, கடைசியாக கடந்த நிலையம், பயணத்திற்கு மீதமுள்ள நேரம், வருகை மற்றும் புறப்படும் நேரம் மற்றும் எதிர்பார்க்கப்படும் வருகை நேரம் உள்ளிட்ட அனைத்து பயண விவரங்களையும் காண்பிக்கும்.
இதேபோல், உங்கள் டிக்கெட் முன்பதிவின் நிலையைச் சரிபார்க்க உங்கள் PNR எண்ணை உள்ளிடலாம்.
- நீங்கள் ரயில் காலெண்டரையும் பார்க்கலாம், அதில் நீங்கள் ஒரு வாரத்தில் இயங்கும் நாட்களையும் அனைத்து வகுப்புகளிலும் இருக்கைகள் கிடைப்பதையும் பார்க்க முடியும்.


Paytm புதிய அப்டேட்டுகள்


இந்தி, பங்களா, தெலுங்கு, மராத்தி, தமிழ், குஜராத்தி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, ஒடியா போன்ற 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் ஒருவர் முன்பதிவு செய்யலாம் என்று Paytm கூறுகிறது. கூடுதல் கட்டணம் என எதுவும் இல்லை என்று பேடிஎம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மூத்த குடிமக்கள் ஒதுக்கீட்டைப் பெறலாம். அதாவது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண் பயணிகள் மற்றும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் பயணிகள் கீழ் பெர்த் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அனைத்து கட்டணங்களும் UPI மூலம் மேற்கொள்ளலாம்.


மேலும் படிக்க | இந்தியா மேட்ச் இலவசமாக பார்க்க இந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ