வோடபோன் ஐடியா (VI) குறைந்த விலையில் சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. நீங்கள் இந்தியா - அயர்லாந்து மேட்சுகளை மிகவும் மலிவு விலையில் பார்க்க விரும்பினால், இந்தத் திட்டம் உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். உங்களுக்குத் தேவையானது ரூ. 82 மட்டுமே. இதன் மூலம் 28 நாட்களுக்கு SonyLIV சந்தாவைப் பெறலாம்.
இந்தியா மற்றும் அயர்லாந்து மேட்சுகளை வெறும் ரூ.82-ல் பார்க்க விரும்பினால், Vi-ன் ரூ.82 ப்ரீபெய்ட் திட்டத்தை வாங்கவும். இது ஒரு டேட்டா வவுச்சராகும். இந்த திட்டத்தில் பயனர்கள் 14 நாட்களுக்கு 4ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். ஆனால் SonyLIV சந்தா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. வோடபோன் ஐடியா பயனர்களுக்கு இந்தியா - அயர்லாந்து மேட்சுகளை மிகக் குறைந்த கட்டணத்தில் பார்க்கும் வசதியை வழங்குகிறது. அதேநேரத்தில் இந்த திட்டத்தில் நீங்கள் மொபைலில் மட்டுமே SonyLIV-ஐப் பார்க்க முடியும். டிவியில் பார்க்கும் வசதி இல்லை.
மேலும் படிக்க | ’2.5 ஜிபி + டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இலவசம்’ ஜியோவின் காஷ்பேக் ஆஃபர்
SonyLIV சந்தா
SonyLIV சந்தாவை நீங்கள் ஆக்டிவேட் செய்தவுடன், 28 நாட்களுக்கு நீங்கள் அதைப் பெறுவீர்கள். இதன் நன்மை என்னவென்றால், நீங்கள் இந்தியா மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் மேட்சுகள் மட்டுமல்லாது பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் பார்க்கலாம். விதவிதமான திரில்லர் வெப்சீரீஸ்களையும் பார்க்கலாம்
SonyLIV திட்டங்கள்
SonyLIV சந்தாவைப் பெறுவதற்கான மற்றொரு வழி, அதை தனியாக வாங்குவது. ஒரு வருடத்திற்கான SonyLIV பிரீமியம் சந்தா உங்களுக்கு ரூ. 999 மற்றும் மொபைல் மட்டும் திட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ.599 செலவாகும். இதன் மூலம் சோனி லைவ்வின் பிரபலமான தொடர்களான கேபிசியை ஆண்டு முழுவதும் பார்க்கலாம். வோடபோன் ஐடியாவின் இந்த வவுச்சர் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
மேலும் படிக்க | ஐபோனில் போலி! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ