81 வயது பாட்டியை, 36 வயது இளைஞர் ஒருவர் காதலித்து, பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே தம்பதிகளாக வாழ்த்து வருவது தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், 81 வயது பாட்டியை, 36 வயது இளைஞர் ஒருவர் காதலித்து, பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே தம்பதிகளாக வாழ்த்து வருவது தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


காதலுக்கு கண் இல்லை என கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஜோடி காதலுக்கு வயதும் இல்லை. முகநூல் (Facebook) மூலம் அறிமுகமான பாட்டியுடன் சாட்டிங் செய்த இளைஞர் ஒருவர், அவரையே காதலித்து கை பிடித்துள்ளார். பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ஐரிஸ் ஜோன்ஸ் (81-வயது) (Iris Jones) மற்றும் எகிப்து நாட்டை சேர்ந்த மஹமத் (36 வயது) (Mohamed Ahmed) என்ற வாலிபரும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர். அவர்களுக்குள் நடந்த சாட்டிங்கிற்கு பின், நட்பை காதலாக புதுப்பித்துள்ளனர்.



கடந்த 2019 நவம்பர் மாதம், தனது காதலனை பார்க்க பிரிட்டனிலிருந்து எகிப்து பறந்து சென்றிருக்கிறார் ஐரிஸ். அவரை வரவேற்க ஏர்போர்ட்டில் காத்திருந்த மஹமத், முதன்முறை நேரில் சந்தித்த போதே, ஐரிஸை தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டாராம். அதனை தொடர்ந்து தங்கள் காதலை ஒருவொருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்ட இந்த ஜோடி, தம்பதிகளாக வாழத் துவங்கிவிட்டனர்.


ALSO READ | ICU வார்டுக்கு செல்லும் முன் காதலனை கரம்பிடித்த காதலி; கொரோனா வார்டில் நிகழ்ந்த விசித்திரம்!



இதுகுறித்து மஹமத் கூறுகையில், ‘இப்படி ஒரு அழகான தேவதையை காதலியாக பெற்ற நான் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவன்’ என்றார். காதல் என்றால் வில்லன் இல்லாமலேயா..! இவர்கள் காதலுக்கு வில்லனாக வந்திருக்கிறார் ஐரிஸின் மகன். 54 வயது நிரம்பிய ஐரிஸ் மகன் ஸ்டீபன், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். எதிர்ப்பை அசால்ட்டாக எதிர்கொண்ட ஐரிஸ், தனது காதலில் உறுதியாக நின்றிக்கிறார். இதனால் மகன் அவரிடமிருந்து பிரிந்து போக, குடும்பமே இரண்டாக உடைந்திருக்கிறது.



இதனிடையே கொரோனா பரவ, தம்பதிகளுக்குள் பிரிவு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனுக்கு செல்ல மஹமத்துக்கும் விசா கிடைக்கவில்லை. மீண்டும் தனது காதலியை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார் மஹமத். 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR