புதுடெல்லி: எந்தவொரு நபரையும்  குழப்பி, பைத்தியம் அல்லது முட்டாள்  என பட்டம் சூட்டும் பலரை நாம் வாழ்க்கையில் சந்திக்க கூடும். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பதே  சிறந்தது. ஏனென்றால் அப்படிப்பட்டவர்களுடன் பழகும் நபர்கள் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் இழக்க நேரிடும். அதனால், அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அல்லது பழகும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களின் வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இது மட்டுமின்றி, இதை உணராமல், யாரேனும் ஒருவரை உணர்த்த முயலும் போது, ​​எதிரில் இருப்பவரை முட்டாளாக நிரூபித்து விடுகின்றனர். அவர்கள் குட்டையை குழப்புவதில் வல்லவர்கள்.


கன்னி:  இவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை துச்சமாக கருதும் மன நிலை உள்ளவர்கள். எனவே, எப்போதும் மற்றவர்களின் செயல்களில் குறைகளைக் கண்டறிந்து. மற்றவர்களை மட்டம் தட்டுவதில் வல்லவர்கள். தங்கள் தவறுகளுக்கு மற்றவர்களைக் குறை கூறவும், பழி சுமத்தவும் தயாராக இருப்பார்கள்.


ALSO READ | இந்த ராசிக்காரருக்கு வரும் புத்தாண்டு உண்மையிலேயே 'HAPPY NEW YEAR' தான்...!!


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்பதை விரும்ப மாட்டார்கள், இதைத் தவிர்க்க  மற்றவர்கள் தான் தவறுக்கு காரணம் என சொல்ல தயங்க மாட்டார்கள். இவர்கள் மைண்ட் கேம் விளையாடுவதில் வல்லவர்கள்.


விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள், சில சமயங்களில் இதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். தங்கள் எதிரியை அவமானப்படுத்துவதற்காக, மட்டம் தட்டுவதற்காக தவறான வழிகளை கூட கடை பிடிக்கலாம்.


துலாம்: இந்த ராசிக்காரர்கள் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் ஆதாரங்களைக் காட்டினாலும், அவர்கள் அதை மறுப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பார்கள். அவர்கள் தங்களைச் சரியாக நிரூபிப்பதற்காக மற்றவர்களை குழப்புவார்கள். 


ALSO READ | சனி பகவானின் நேரடி தாக்கம்: சிலருக்கு சோதனை, சிலருக்கு சாதனை


கும்பம்: கும்பம் ராசிக்காரர்கள் பிறர் மீது பொறாமை கொள்ளும் குணம் உடையவர்கள். யாரோ ஒருவர் முன்னேறிச் செல்வதை பார்த்தால், தங்கள் குறைகளை எண்ணத் தொடங்கி, பிறகு இந்த வேலையில் எந்த அளவிற்குச் செல்கிறார்கள். வெற்றிகரமான நபரை அவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள் மற்றும் அவரை சரியான பாதையில் இருந்து தவறாக வழிநடத்துகிறார்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


 ALSO READ | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR