இந்த ராசிக்காரருக்கு வரும் புத்தாண்டு உண்மையிலேயே 'HAPPY NEW YEAR' தான்...!!

சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார விஷயங்களில் இந்த புத்தாண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும். புகுந்த வீட்டார் மூலம் பண ஆதாயமும் மகிழ்ச்சியும் வந்து சேரும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 7, 2021, 04:54 PM IST
இந்த ராசிக்காரருக்கு வரும் புத்தாண்டு உண்மையிலேயே 'HAPPY NEW YEAR' தான்...!! title=

புதுடெல்லி: 2022  ஆம் ஆண்டு, சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் புத்தாண்டாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் ஏற்படும், ராகு பெயர்ச்சி  நன்மைகளைத் தரும். அதே சமயம் ஜாதகத்தில் வியாழனும் சனியும் சேர்ந்து வருவதால் எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படலாம். இருப்பினும் கல்வித்துறையில் கடுமையாக உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும்.  நிதி விஷயங்களில் கவனமாகப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். சிம்ம ராசிக்காரர்களுக்கு 2022 மிக சிறப்புமிக்கதாக அமையப் போகிறது.

சிம்ம ராசிக்காரர்களின் ராசிபலன் 2022 

தொழில் சம்பந்தமாக புத்தாண்டு சிறப்பானதாக இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் பெருகும். இதனுடன் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். எனினும், வேலையில் இருப்பவர்கள் போராட வேண்டியிருக்கும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு புத்தாண்டு சிறப்பு வாய்ந்தது. பதவி உயர்வும் கிடைக்கலாம்.

ALSO READ | சனி பகவானின் நேரடி தாக்கம்: சிலருக்கு சோதனை, சிலருக்கு சாதனை

சிம்மம் ராசிக்காரர்களுக்கு,  இந்த புத்தாண்டில் காதல் வாழ்க்கையில் சிறு ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இருப்பினும் காதல் திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்பு உண்டு. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடும் விலகும்.

நிதி விஷயங்களில் புத்தாண்டு சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இருப்பினும், நீங்கள் எதிரிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும். ஏப்ரலில் வாகனம், வீடு, மனை  வாங்க வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி, மாமனார், மாமியார் வழியிலும் பணப் வரவு உண்டாகும். புத்தாண்டில் பணத்தை மிச்சப்படுத்துவீர்கள்.

குடும்ப வாழ்க்கை: வியாழனின் தாக்கத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு தொடரும். இதனால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். 
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

 ALSO READ | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News