தனிநபர் கடன்கள் என்பது ஒருவரது இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கும் ஒன்றாக இருக்கிறது.  கல்வி, திருமணம், கடன் அடைக்க, சுப நிகழ்வுகளுக்கும், விபத்து போன்ற எந்த மாதிரியான சூழ்நிலையை சமாளிக்கவும் தனிநபர் கடன்கள் பயன்படுகிறது.  சிலர் தங்கள் வணிகங்களை அமைப்பதற்கும், பல்வேறு பொருட்களை வாங்குவதற்கும் கூட தனிநபர் கடனைத் தேர்வு செய்கிறார்கள்.  கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், உங்களுக்கு ஏன் கடன் தேவைப்படுகிறது மற்றும் எவ்வளவு கடன் இருக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.  பல தனிநபர்கள் புதிய தொழில் தொடங்க, திருமணங்கள், உயர் படிப்புகள் போன்றவற்றிற்காக தனிநபர் கடனைத் தேர்வு செய்கிறார்கள்.  எனவே, உங்களுக்கு ஏன் கடன் தேவை என்பதை நீங்கள் முடிவு செய்து அதன் பின்னர் கடன் வாங்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Pension: அரசு அளித்த பரிசு, இவர்களுக்கு இனி அதிக பென்ஷன், இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் தனிநபர் கடனுக்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்களா இல்லையா என்பதைப் பார்ப்பது மிக முக்கியமானது.  இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான வங்கிகள் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கடனை வழங்கும், கடன் பெறுவதற்கான அதிகபட்ச வயது 58 ஆகும்.  தனிநபர் கடன் பெற வேண்டுமானால் நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் தனிநபர் கடனுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.  தனிநபர் கடன் தொகைக்கான வட்டி உங்களுக்கு ஏற்றதா இருக்கிறதா என்பதை கடன் வாங்குபவர்கள் சரிபார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.  கடன் உங்கள் தகுதிக்கு ஏற்ப இருந்தால் மட்டுமே நீங்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  பல வங்கிகள் தங்கள் தனிநபர் கடனில் 9.20% முதல் 13.50% வரை வழங்குகின்றன.  எனவே, தனிநபர் கடனைப் பெறுவதில் உள்ள வட்டி விகிதம் மற்றும் பல்வேறு கட்டணங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.



கடன் பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐ தொகை எவ்வளவு என்பதை பாருங்கள்.  அனைத்து வங்கிகளின் தளங்களிலும் கடன் இஎம்ஐ கால்குலேட்டரைக் காணலாம், துல்லியமான தகவலைப் பெற இந்த கருவியை நீங்கள் பயன்படுத்தலாம்.  கடனை பெற ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் முன் கடைசியாக ஒரு முறை சரிபார்ப்பது மிகவும் அவசியம்.  பெயர், முகவரி, தொடர்புத் தகவல் மற்றும் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்த்து அவை சரியானவை என்பதை உறுதிப்படுத்தவும்.  மேலும் வங்கி ஸ்டேட்மென்ட், சம்பளச் சீட்டுகள், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்ற ஆவணங்களையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும்.  அனைத்து ஆவணங்களையும் முழுமையாகச் சமர்ப்பித்த பிறகு, கடன் தொகை அங்கீகரிக்கப்பட்டு உங்கள் கணக்கிற்கு பணம் வந்து சேரும்.


மேலும் படிக்க | Old Pension Scheme: விரைவில் அரசு தரப்பிலிருந்து சூப்பர் செய்தி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ