Personal Loan: பொதுவாக வங்கிகளில் கடன் வாங்குவது இந்தியாவில் உள்ள மக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் ஒரு கருவியாகும்.  கடன்கள் இந்தியாவில் பல்வேறு விஷயங்களுக்கு வழங்கப்படுகிறது.  தனிநபர் கடன், வாகன கடன், வீட்டுகடன், விவசாய கடன் என பலவற்றிற்கு கடன் வழங்கப்படுகிறது.  இந்தியாவில் வங்கிகளில் கடன்களை வாங்கும் போது எல்லா விஷயங்களையும் வங்கிகளில் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. குறிப்பாக தனிநபர் கடன்கள் நாளை வரப்போகும் வருமானத்தை இன்று பயன்படுத்துவதற்கான ஒரு வழியாகும். சில வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும். ஏனென்றால், தனிநபர் கடன்கள் பாதுகாப்பற்ற கடன்கள். கடன் தொகை மற்றும் வட்டி விகிதம் உங்கள் வருமானம், ஏற்கனவே உள்ள கடன், திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் பிற அளவுருக்களைப் பொறுத்தது மாறும்.  கடன் வாங்கும் போது வங்கிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகள்:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஹஜ் உம்ரா விசாவில் மாற்றமா? 6 நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு NO Tourist VISA!


கடனுக்கு எவ்வளவு வட்டி: ஒரு வங்கியில் தனி நபர் கடன் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கான வட்டி விகிதங்கள் என்ன, இந்த வட்டி விகிதங்கள் நிலையானதா, இல்லை அடிக்கடி மாறுமா, வங்கியின் முந்தைய வட்டி விகிதங்கள் போன்றவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.  இது போன்ற கேள்விகளை வங்கியில் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.  கடனுக்காக நீங்கள் எவ்வளவு தொகையை மீண்டும் செலுத்த வேண்டும் என்ற ஒரு ஐடியாவை இது உங்களுக்கு தரும். 


கடனை திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள்: கடனை திரும்ப செலுத்த அதிகபட்ச காலம் என்ன, குறைந்தபட்ச காலம் என்ன, குறிப்பிட்ட ஆண்டுக்குள் கடனை திருப்பி செலுத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன,வட்டி விகிதங்கள் குறையுமா? சொன்ன தேதியில் வட்டி தொகையை செலுத்த தவறினால் எவ்வளவு அபராதம், திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் என்ன போன்றவற்றை தெரிந்து கொள்வது நல்லது.  சில வங்கிகள் தவணைக்காலம் முடிவதற்குள் நீங்கள் கடனை முன்கூட்டியே மூட திட்டமிட்டால், அதற்கான முன் அபராதம் விதிக்கப்படலாம். எனவே வங்கிகளில் கடன் வாங்குவதற்கு முன், இவற்றையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.  


கட்டணம் மற்றும் கட்டணங்கள்: கடன் வாங்கும் போது அதற்கான முன்கூட்டியே செலுத்த வேண்டிய கட்டணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  பல வங்கிகள் செயலாக்க கட்டணம் என்று ஒரு தொகையை எடுத்து கொள்கின்றனர். மேலும் மறைமுகமாகவும் நமக்கு தெரியாமலேயே சில கட்டணங்களை செலுத்துவோம்.  வட்டி விகிதத்துடன் கூடுதலாக, பல கட்டணங்கள் உள்ளன. முன்கூட்டியே கடன் தொகையை செலுத்தினால் அபராதம், தாமதமாக செலுத்தும் கட்டணம் போன்றவை அடங்கும். கடன் வாங்கும் முன் இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.


மாதாந்திர தவணை: மேலும் கடனுக்கு மாதாந்திர தவணை எவ்வாறு கணக்கிடப்படுகிறது மற்றும் ஒருவேளை ஏதேனும் ஒரு மாதத்தில் தாமதமாக செலுத்தினால் அதற்கு எவ்வளவு கட்டணங்கள் செலுத்த வேண்டும், அதனை செலுத்த எவ்வளவு காலம் வழங்கப்படும் போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.  கம்மி ஆண்டில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த நினைத்தால் அதிக வட்டி கட்ட நேரிடும். இது மாதாந்திர தவணையை அதிகரிக்கும்.  அதிக ஆண்டுகள் எடுத்துக்கொண்டால் தவணை குறையும்.  ஆனால் அதிக வட்டி செலுத்துவீர்கள்.


கடன் தகுதி: கடன் எதன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது? ஒருவேளை கடனை செலுத்த முடியவில்லை என்றால் என்ன நடக்கும், கடன் வாங்க என்ன என்ன ஆவணங்கள் தேவை போன்றவை வங்கிக்கு வங்கி மாறுபடும்.  தனிநபர் கடனுக்குத் தகுதிபெற சில தகுதிகள் உள்ளன. வயது, மாத வருமானம், கிரெடிட் ஸ்கோர் ஆகியவை பொறுத்து அளவு தீர்மானிக்கப்படும்.


மேலும் படிக்க | கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசை வழங்கிய PNB, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ