உதட்டருகே மச்சம் கொண்டவர்களின் குணாதிசயம்! கவர்ச்சி, நிதானம், கலைதிறன்-வேறு என்ன?
Mole Around Lips Personality Traits : பலருக்கு உடலில் அங்கங்கே மச்சங்கள் இருக்கும். குறிப்பாக உதட்டிற்கு மேல் இருக்கும் மச்சம் பலரை வசீகரிக்க செய்யும்.
Mole Around Lips Personality Traits : நம் உடலில் இருக்கும் மச்சங்களை வைத்து நாம் எப்படிப்பட்டவர் என்பதை சிலர் கூறுகின்றனர். அது பல சமயங்களில் சரியானதாகவும் இருக்கலாம், தவறானதாகவும் இருக்கலாம். வெவ்வேறு கலாச்சாரங்களில் இதை ஒவ்வொரு மாதிரி நம்புகின்றனர். உடலில் மச்சம் இருப்பது அழகான விஷயம். அதிலும் உதட்டெருகே மச்சம் இருந்தால் கொள்ளை அழகு. அப்படி, உதட்ட அருகே மச்சம் இருப்பவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்வோமா?
வசீகரம்:
உதட்டருகே மச்சம் இருப்பவர்கள் கவர்ச்சிகரமான ஆளாவாக இருப்பர். இவர்கள் செய்யும் செயல்களில் இருந்து, பேசும் வார்த்தைகளில் இருந்து, நடவடிக்கைகள் வரை அனைத்தும் கவர்ச்சியாக இருக்கும். அதேபோல தங்கள் உணர்ச்சிகளையும் எந்தவித தங்கு தடையின்றி சுதந்திரமாக கூறவும் இவர்களுக்கு பயம் இருக்காது. பிறர் பேசும் போது இருக்கும் வசீகரத் தன்மையை விட இவர்கள் பேசும் போது பல இவர்களால் வசீகரிக்கப்படுவர். இவரிடம் அப்படி என்ன ஸ்பெஷலாக இருக்கிறது என்பது மற்றவர்களுக்கு தெரியவில்லை என்றாலும், ஏதோ ஒன்று இவரிடம் பிறரை ஈர்க்கும் வகையில் இருக்கிறது என்பதை பிறர் தெரிந்து கொள்வர்.
கற்பனை வளம் மிக்கவர்:
உதட்டிருக்கே மச்சம் கொண்டவர்கள் கற்பனை திறன் மிக்கவர்களாக இருப்பர் என்பது பலரால் நம்மப்படுகிறது. இவர்களில் சிலர், கலைத் தொழிலை தங்களின் முதல் தொழிலாக வைத்திருப்பர். இதனால் அவர்களால் தனது கற்பனை வளத்தை எந்த வகையிலும் யாரிடத்திலும் கொண்டு சேர்க்க முடியுமாம். இதில் பெரும்பாலானோர் எழுத்தாளராக மிளிர்வதாக கூறப்படுகிறது.
சமூகத்துடன் ஒற்றுமை:
உதட்டழகி மச்சம் கொண்டவர்கள், பிறருடன் எளிதாக நண்பராவதற்கு தகுதியுடையவர்களாக இருக்கலாம். இவர்கள், தனக்கு தெரியாத நபருடன் கூட சகஜமாக பேசி பழகி அவரை நண்பர் ஆக்கி விடுவாராம். தெரியாத ஊருக்கு சென்றால் கூட இவருடன் நட்புடன் பேசுவதற்கு நான்கு பேர் வருவாராம்.
மேலும் படிக்க | வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?
யோசித்து செயல்படுபவர்:
உதட்டருக்கே மச்சம் கொண்டவர்கள், நிதானம் மற்றும் பொறுமையை கடைப்பிடிப்பவர்களாக இருப்பராம். அவசரப்பட்டு முடிவெடுத்து பின்னர் தன்னை திட்டிக் கொள்வது இவர்களுக்கு பிடிக்காது. எனவே ஒரு முடிவை மிகவும் தாமதமாக எடுத்தாலும் அதை நின்று நிதானமாக யோசித்து எடுப்பராம். முந்தைய உறவுகளில் எந்த தப்பு செய்தார்களோ அதை செய்யாமல், புதிதாக இருக்கும் விஷயத்தை எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என்று யோசித்து செயல்படுவர்.
ஆழமான உணர்த்திறன்:
பலருக்கு தன்னை பற்றி தனக்கே தெரியாது. இதனால் அவர்களால் அவர்களின் உணர்ச்சிகளையும் சமயங்களில் கையாள முடியாமல் போகலாம். ஆனால் உதட்டிருக்கே அச்சம் கொண்ட நபர்கள், தங்களது உணர்ச்சிகள் எப்படிப்பட்டதாக இருப்பினும் அதை கையாள்வதற்கு ஏற்ற மன பக்குவம் கொண்டவர்களாக இருப்பார். தன்னை புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாது தன்னை சுற்றி இருப்பவர்களின் புரிந்து, தெரிந்து, நன்கு அறிந்து கொள்வர். அவர்களுக்கு ஏற்றார் போல் தன்னை சுற்றி இருக்கும் சூழலையும் மாற்றுவர்.
கோபம்:
உதட்டருகே மச்சம் கொண்ட நபர்களுக்கு அவ்வளவு எளிதில் கோபம் வராதாம். ஆனால், ஒரு நாள் வந்து விட்டால் சுனாமி போல அனைவரையும் சுருட்டி கொண்டு போகும் அளவிற்கு கோபம் வருமாம். அதன் பிறகு, அந்த கோபத்திற்கு ஆளான நபர் தன்னிடம் பேசாவிட்டால் கூட இவர்கள் வருந்த மாட்டார்களாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தரவுகளைஅடிப்படையாகக் கொண்டவை. இவற்றிற்கு ZEE செய்தி எந்த வகையிலும் பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ