நம் அனைவருக்குமே, வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். நமது வாழ்க்கை, நம்மை பொறுத்து மட்டும் அல்ல, நம்முடன் பழகுபவர்களை பொறுத்தும் அமைகிறது. நமது முன்னேற்ற பாதையும் நம்மை சுற்றி இருப்பவர்களும் அதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். அதே போல, நமது தோல்விக்கும் அவர்கள்தான் காரணமானவர்களாக இருக்கின்றனர். எனவே, நமது வாழ்வில் நமக்கு தேவையற்ற சில நபர்களை நாம் ஒதுக்கி வைப்பது மிகவும் முக்கியமாகும். அவர்கள் யார் யார் தெரியுமா?
சுயநலம் கொண்டவர்கள்:
சுயநலம் கொண்டவர்கள் நமக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு விளைவிப்பவர்களாக இருப்பர். இவர்கள், நம்மிடம் வேலை வாங்கும் வரை நண்பராக பழகிக்கொண்டு பின்னர், நம்மை கழற்றி விட்டு விடுவர். எனவே, இது போன்ற ஆட்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.
உபயோகித்து கொள்பவர்:
இவர்களை சந்தர்ப்பவாதிகள் (opportunist)என்று கூறுவர். இவர்கள், சூழலுக்கு ஏற்ப அவர்களை மாற்றிக்கொள்வர். அதே போல, உங்களை உபயோகித்து கொள்ளவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். ஆபத்தான தருணங்களில் அவர்கள் உங்களை பணயம் வைத்து கூட தப்பிக்க முயற்சி செய்யலாம். எனவே, இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கலாம்.
மனப்பக்குவம் இல்லாதவர்கள்:
தனது தோல்வியை, தான் சொல்லும் கருத்து தவறுதான் என ஏற்றுக்கொள்ளாத மனப்பக்குவம் இல்லாதவர்களிடம் இருந்து தள்ளியே இருங்கள். அவர்கள், தங்களின் தோல்வியை நினைத்து பிறரிடம் எப்போதும் புலம்பும் குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பர். இவர்களுக்கு, பிறர் தன்னை சுற்றி ஜெயித்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாத தன்மை இருக்கும். இப்படி, மனப்பக்குவம் இல்லாதவர்களிடமிருந்து தள்ளியே இருக்கவும்.
மேலும் படிக்க | திருமண வாழ்க்கையே பிரச்னையா இருக்கா? தீர்வு காண இந்த 7 விஷயங்களை செய்யுங்க!
சோம்பேறித்தனம் கொண்டவர்கள்:
சோம்பேறித்தனம் என்பது, நம்மை நாமே அழித்துக்கொள்ள வைத்திருக்கும் கண்ணுக்கு தெரியாத ஆயுதம் ஆகும். நமது வெற்றிக்கு தடையாக இருக்கும் இந்த சோம்பேறித்தனத்தை களைய வேண்டும் என நாம் பல நாட்களாக முயற்சி செய்து கொண்டிருப்போம். ஆனால், நம்மை சுற்றி இருக்கும் சிலர், சோம்பேறித்தனத்திலேயே ஊறிப்போய் நம்மையும் அவர்களுடன் சேர்த்து இழுக்க நினைப்பர். அவர்களிடம் இருந்து நாம் தள்ளி இருப்பது மிகவும் நல்லது. இது போன்றவர்கள், அவர்களின் வெற்றிக்கு தடையாக இருந்து கொள்வது மட்டுமன்றி, பிறரது வெற்றிக்கும் தடையாக இருப்பர்.
ஈகோ படைத்தவர்கள்:
ஒரு சிலர், தான் தவறே செய்தாலும் மனம் திருந்த மாட்டார்கள். அவர்கள் மனம் செய்த தவறுக்கு வருந்த சொன்னாலும், அவர்களால் அந்த வருத்தத்தை உணர முடியாது. இது போன்றவர்களிடம் சகவாசம் வைத்துக்கொள்ளவே கூடாது. இவர்கள், தங்களுக்கு முன்னாள் யார் வெற்றி பெற்றாலும், யார் பிறரை புகழ்ந்து பேசினாலும் பிடிக்காது. இது போன்றவர்களால் அவர்களை சுற்றி இருப்பவர்களும் டாக்ஸிக்காக உணருவர்.
பிறருக்கு மரியாதை கொடுக்காதவர்கள்:
ஒரு சிலர், தனக்கு பிடித்த மனிதர்களிடம், அந்தஸ்து உள்ளவர்களிடம், செல்வம் படைத்தவர்களிடம், அழகானவர்களிடம் மட்டும் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வர். அவர்கள், தங்களுக்கு நிகராக அல்லது உயர்வாக யாரை கருதவில்லையோ, அவர்களுக்கு பெரிதாக மரியாதை கொடுக்க மாட்டார்கள். இப்படி, சக மனிதரை மனிதராக மதிக்க வேண்டும் என்று மரியாதை தெரியாதவர்களிடம் பேச்சே வைத்துக்கொள்ளாதீர்கள்.
மேலும் படிக்க | தொலை தூர காதலை வலுவாக்குவது எப்படி? ரிலேஷன்ஷிப் டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ