புது தில்லி: பிஎஃப் எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஒரு நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீட்டு கணக்கு ஆகும். இது ஊழியர், நிர்வாகம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் பங்களிப்பால் உருவாக்கப்படும் ஒரு சேமிப்பு நிதி என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (இபிஎஃப்ஓ) நடத்தப்படும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இந்த நிதி ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. பிஎஃப் கணக்கில் பல ஆண்டுகளாக டெபாசிட் செய்யப்பட்ட தொகை, வட்டியுடன் சேர்ந்து ஓய்வு பெறும்போது பணியாளருக்கு வழங்கப்படும்.


பிஎஃப் பொதுவாக ஓய்வூதிய நிதியாக பார்க்கப்படுகிறது. ஓய்வுக்கு முன் இந்த நிதியிலிருந்து பணத்தை எடுக்க பெரும்பாலும் யாரும் நினைப்பதில்லை. ஓய்வூதியத்திற்குப் பிறகு அல்லது ஓய்வுக்கு முன் பணியாளர் இறந்தால் பயனாளி பிஎஃப்  தொகையை பெறலாம். இருப்பினும், சில சூழ்நிலைகளில், ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கு முன்னும் பிஎஃப்-லிருந்து பணத்தை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். 


ஓய்வுக்கு முன் பிஎஃப்-லிருந்து பணம் எடுக்கும் முறை


பணி ஓய்வுக்கு முன் பிஎஃப்-லிருந்து பணத்தை எடுக்க வசதிகளை அரசு முன்னரே வழங்கியிருந்தது. எனினும், கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் இது தொடர்பாக மக்களுக்கு மேலும் சில நிவாரணங்களை வழங்கியது. 


புதிய விதிகளின்படி, ஊழியர்கள் தங்களது அடிப்படை ஊதியத்தில் 75 சதவீதம் அல்லது பிஎஃப் கணக்கில் 3 மாதங்களுக்கு நிகர இருப்புத் தொகையை எடுக்கலாம். இதற்கு, நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதன் செயல்முறை 3 வணிக நாட்களில் நிறைவுசெய்யப்படும். 


மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ 


இது தவிர, வீட்டுக் கடனுக்காகவும் பி.எஃப்-ல் இருந்து பணத்தை எடுக்கலாம். இதற்கு 60 மாதங்கள் கண்டிப்பாக நீங்கள் வேலை பார்த்திருக்க வேண்டும். தொடர்ந்து 2 மாதங்கள் வேலை இல்லாவிட்டாலும் பிஎஃப்-ல் இருந்து பணத்தை எடுக்கலாம். 


இது தவிர, உங்களது, குழந்தைகள் மற்றும் உடன்பிறந்தவர்களின் திருமணம் அல்லது 10ஆம் வகுப்புக்குப் பிறகு குழந்தைகளின் கல்விக்காகவும் பிஎஃப் பணத்தை எடுக்கலாம். இருப்பினும், நீங்கள் 84 மாதங்கள் வேலை செய்திருந்தால் மட்டுமே இந்தக் கோரிக்கை செல்லுபடியாகும். மேலும், ஒருவர் ஓய்வுபெறும் ஓராண்டுக்கு முன் பிஎஃப் தொகையில் 90 சதவீதத்தை எடுத்துக்கொள்ளலாம். 


பிஎஃப் தொடர்பான புதிய வருமான வரி விதி என்ன?


இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிஎப் மூலம் கிடைக்கும் வட்டிக்கு, அரசு வரி விதிக்கத் தொடங்கியுள்ளது. புதிய வருமான வரி விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் ஒரு ஊழியரின் பிஎஃப் பங்களிப்பு 2.5 லட்சத்தை தாண்டினால், அவர் பெறும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். ஏப்ரல் 1 முதல், பிஎஃப் கணக்குகள் வரி விதிக்கக்கூடிய மற்றும் வரி விதிக்கப்படாத பகுதிகளாக பிரிக்கப்படும். மத்திய அரசு ஆகஸ்ட் 2021 அன்று புதிய வருமான வரி விதிகளை வெளியிட்டது.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ அரியர் தொகை கிடைக்குமா, கிடைக்காதா? முக்கிய அப்டேட் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR