EPFO: ஆன்லைனில் இபிஎஃப்-ஐ மாற்றுவது எப்படி? முழு செயல்முறை இதோ

EPFO: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி இபிஎஃப்-ஐ டிஜிட்டல் முறையில் மாற்றலாம்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 31, 2022, 02:21 PM IST
  • ஆன்லைனில் இபிஎஃப்-ஐ மாற்றுவது எப்படி?
  • இபிஎஃப்-ஐ டிஜிட்டல் முறையில் மாற்றலாம்.
  • முழு செயல்முறை இதோ.
EPFO: ஆன்லைனில் இபிஎஃப்-ஐ மாற்றுவது எப்படி? முழு செயல்முறை இதோ title=

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி இபிஎஃப்-ஐ டிஜிட்டல் முறையில் மாற்றலாம். 

இது குறித்து இபிஎஃப்ஓ சமீபத்தில் ட்வீட் செய்திருந்தது. 'இபிஎஃப்-ஐ டிஜிட்டல் முறையில் எப்படி மாற்றுவது என்பதற்கான வழிகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். #EPFO #SocialSecurity youtube.com/watch?v=BJFJgVNZiqE," என இபிஎஃப்ஓ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ட்வீட் செய்தது. இதில் முழு செயல்முறையையும் விளக்கும் வகையில் ஒரு வீடியோவும் இடம்பெற்றுள்ளது.

இபிஎஃப்-ஐ ஆன்லைனில் மாற்றுவது எப்படி? படிப்படியான வழிகாட்டி

ஸ்டெப் 1:  இபிஎஃப்ஓ ​​உறுப்பினர் 'ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலுக்கு' சென்று UAN மற்றும் கடவுச்சொல்லுடன் லாக் இன் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | சம்பளம் பெறும் வகுப்பினருக்கு முக்கிய செய்தி, ஓய்வூதியம் இரட்டிப்பாகுமா

ஸ்டெப் 2: அதன் பிறகு உறுப்பினர்கள் 'ஆன்லைன் சேவைகள்' என்ற பிரிவுக்குச் சென்று, 'ஒரு உறுப்பினர் - ஒரு  இபிஎஃப் கணக்கு (பரிமாற்றக் கோரிக்கை)' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 3: அடுத்து,  இபிஎஃப்ஓ ​​உறுப்பினர்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் தற்போதைய பணியிடத்திற்கான பிஎஃப் கணக்கைச் சரிபார்க்க வேண்டும்.

ஸ்டெப் 4: பின்னர் 'கெட் டீடெயில்ஸ்' என்பதை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, விண்ணப்பதாரர்களின் முந்தைய பணியிடத்தின் பிஎஃப் கணக்கு தோன்றும்.

ஸ்டெப் 5: இபிஎஃப்ஓ ​​உறுப்பினர்கள் இப்போது சான்றளிக்கும் படிவத்திற்கு (அடெஸ்டிங்க் ஃபார்ம்), தாங்கள் பணிபுரிந்த முந்தைய நிறுவனம் அல்லது தற்போது பணிபுரியும் நிறுவனம் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

ஸ்டெப் 6: UAN பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெற உறுப்பினர்கள் 'OTP பெறுக' விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 7: இறுதியாக, இபிஎஃப்ஓ ​​உறுப்பினர்கள் OTP ஐ உள்ளிட்டு 'சப்மிட்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | PF Update: அதிர்ச்சி செய்தி!! 2021-22 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.1% ஆக குறைக்கப்பட்டது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News