Viral Photo: குப்பைகளை சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்ட யானைகள்..!!!
இலங்கையைச் சேர்ந்த யானைகளின் சில படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த படங்களில், யானைகள் ஒரு பிளாஸ்டிக் குவியலில் உணவு பொருளை தேடுகின்றன. இந்த யானைகளின் அவல நிலை கண்ணீரை வரவழைக்கிறது
இலங்கையைச் (Sri Lanka) சேர்ந்த சில யானைகளின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த படங்களில், யானைகளின் கூட்டம் காட்டை விட்டு வெளியேறி குப்பைகளில் உணவைத் தேடுகிறது. மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கான தண்டனையை விலங்குகள் அனுபவிக்கின்றன. இலங்கையிலிருந்து வரும் இந்த படங்கள் இணையம் முழுவதும் பேசப்டுகின்றன.
இணையத்தில் ஒரு புயலை உருவாக்கிய இந்த படங்களை தர்மபிலன் திலக்சன் (Tharmaplan Tilaxan)என்ற புகைப்படக் கலைஞர் எடுத்துள்ளார். தர்மபிலன் திலக்சன் விலங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார். இந்தப் படத்தை பகிர்ந்து, அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மனித தவறுகளுக்கு விலங்குகள் தண்டனையை அனுபவிக்கின்றன. பிளாஸ்டிக் சாப்பிடுவது விலங்குகளுக்கு மரணம் ஏற்படலாம். பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து வருவதால் காட்டு விலங்குகள் இப்போது பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.
பொதுவாக, யானைகள் தங்கள் இரையை தேடி தினமும் குறைந்தது 28 முதல் 30 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாக புகைப்படக் கலைஞர் தர்மப்லான் திலக்சன் தெரிவித்தார். அப்போது அவை பல்வேறு வகையான தாவரங்களை சாப்பிடுகின்றன. ஆனால் இலங்கையை (Srilanka) சேர்ந்த இந்த யானைகள் பிளாஸ்டிக் சாப்பிடும் படங்கள் மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும். காடுகளை சென்றடையும் நமது கழிவுகளும் குப்பைகளும் காட்டு உயிரினங்களின் குடலை அழித்து வருகின்றன.
பல வன அதிகாரிகளும் இந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இது போன்ற குப்பைக் குவியல்களில் யானைகள் பிளாஸ்டிக் சாப்பிடுவதைக் கண்டு சுற்றுச்சூழலில் பணிபுரியும் மக்கள் அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர். இந்த கழிவு யானைகளின் (Elephant) வயிற்றுக்கு செல்வது மட்டுமல்லாமல், மலம் வடிவில் காடுகளுக்குச் செல்வதும் மற்ற விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என கூறியுள்ளனர்.
இந்திய வன அதிகாரி (IFS) பர்வீன் கஸ்வானும் இந்த படத்தை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார். இதை விட சோகமான படம் இருக்க முடியாது என்றும் அவர் எழுதியுள்ளார்.
ALSO READ | மனிதர்களுக்கும் மட்டுமல்ல, கொரில்லாக்களுக்கும் ஆபத்தாகிறதா Corona?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR