வகுப்பறைக்கு வெளியே ஹைதராபாத்தில் பசியுள்ள சிறுமியின் புகைப்படம் வைரலாகியதை தொடர்ந்து; அவளுக்கு அதே பள்ளியில் இடன் கிடைத்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐதிராபாத்தில் குடிமல்கப்பூர் என்ற கிராமத்தில் தேவல் ஜாம் சிங் என்ற அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க வெளியில் ஒரு சிறுமி பிச்சை எடுக்கும் தோற்றத்தில் நின்று ஆசிரியர் சொல்லித்தரும் பாடங்களை எல்லாம் கவனிக்கும்படியான ஒரு புகைப்படம் வெளியானது.


இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பலர் இந்த புகைப்படங்களைப் பகிர்ந்தனர். பின்னர் இது குறித்து நடந்த விசாரணையில் இந்த சிறுமி பெயர் திவ்யா என்பதும். தினமும் பள்ளிக்கு வருவார் என்றும், பள்ளி முடிந்ததும் அங்கிருக்கும் மிச்ச உணவுகளைச் சாப்பிடுவார் என்றும், அவளது பெற்றோர் குப்பை சேகரித்து அதை விற்று குடும்பம் நடத்தி வருவதும், காசு இல்லாததால் அவர்களது குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பவில்லை என்பதும் தெரியவந்தது.



இந்த செய்தி வைரலான நிலையில் திவ்யா தான் வகுப்பறை வாசலில் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அதே பள்ளியில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிறுமியை அந்த பள்ளியில் சேர்ந்தது தனது குழுவினர் என வெங்கடேஷ் ரெட்டி என்பவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த செய்தியும் வைரலாகி தற்போது இந்த சிறுமிக்கு ஏங்கியவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.