உடல் எடையை குறைக்க அன்னாசிப்பழ டீ : உடல் எடை குறைய வேண்டும் என்றால், காய்கறிகளும், கீரைகளும், பழங்களும், உடற்பயிற்சியும் அவசியம்.. இவைகளுடன் நாம் அன்றாடம் குடிக்கும் பானங்களிலும் சிறிது கவனம் செலுத்தினால், உடல் எடை குறைய அவை பெரிதும் துணைபுரியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையைக் குறைப்பது இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. உடல் எடையை குறைப்பது எளிய விஷயமல்ல. உடல் எடை சட்டென்று அதிகமாகி விடுகின்றது. ஆனால், அதை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கவேண்டியிருக்கிறது. உடல் பருமனை கட்டுப்படுத்த நமது வாழ்க்கை முறையும் உணவு முறையும் மிகவும் சரியாக இருக்க வேண்டியது மிக அவசியம். அதுமட்டுமின்றி உடல் எடை குறைய வேண்டுமானால் சிலஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டியது அவசியமாகும். இதனுடன் சில பானங்களை குடித்தால் உடல் எடை குறையத் தொடங்கும்.


மேலும் படிக்க | ஓமவல்லிக்குள் இருக்கும் நல்ல குணங்கள் என்ன? பல நோய்களுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி!


உடல் பருமனால் அவதியில் உள்ளவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். உடல் எடையை குறைக்கவும், தொப்பை கொழுப்பை குறைக்கவும் சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழிதான் இந்த பானம் ஆகும். அந்த பானம் அண்ணாச்சி பழம் டீ ஆகும். எனவே உடல் எடையை குறைக்க அண்ணாச்சி பழம் டீயை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது இந்த பதிவில் காணலாம்.


முதலாவதாக, அன்னாசிப்பழத்தை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம்.. காரணம், அன்னாசி பழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்தும், நிறைய நார்ச்சத்தும் குறைவான கொழுப்புச்சத்தும் உள்ளது. இந்த பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதியானது, நம்முடைய உடலிலுள்ள கொழுப்பை எரிக்க தூண்டி, ஜீரணத்தை எளிதாகுகிறது.. இதனால் நச்சுக்கள் வெளியேறி, குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.


அன்னாசிப்பழம் சத்துக்களின் களஞ்சியமாகும். ஏனெனில் அன்னாசிப்பழத்தில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற பல ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பழம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருகிறது. அதேபோல் அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளதால், இவை உடல் எடையை குறைக்க உதவும். அதுமட்டுமின்றி இதில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவும். இந்நிலையில் உடல் எடையை குறைக்க அன்னாசி டீ எப்படி தயாரிக்க வேண்டும் மேலும் அதன் நன்மைகள் என்ன எப்படி உடல் எடை குறைக்க உதவும் என்பதை தெரிந்துக்கொள்வோம். 


அன்னாசிப்பழம் டீ எப்படி தயாரிப்பது :


தேவையான பொருட்கள்
தண்ணீர்
அன்னாசி பழத்தின் ஜூஸ்
எலுமிச்சை சாறு
தேயிலை பை


அன்னாசி டீ செய்முறையி இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள்
முதலில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். அதன் பின்னர் இப்போது இந்த தண்ணீரை ஒரு கிளாஸில் ஊற்றி, அதில் டீ பேக்கை போட்டு, 5 முதல் 7 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும், இதன் பிறகு அந்த தண்ணீரில் அன்னாசி பழச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து குடித்து வரவும்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஒல்லி பெல்லி வேணுமா? எடை குறையணுமா? வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க போதும்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ