Fennel Seeds: பெருஞ்சீரகம் பல பிரச்சனைகளை தீர்க்கிறது, இதில் வாய் துர்நாற்றத்தைப் போக்கக்கூடிய பண்புகள் உள்ளன. மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பெருஞ்சீரகம் பல பிரச்சனைகளை குணப்படுத்தும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், தினசரி பெருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் போதும்.
உடல் எடையை குறைக்க விரும்பினால் பெருஞ்சீரகம் மற்றும் மஞ்சள்தூள் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வடிகட்டி குடிக்கவும். இதனை தினசரி குடித்தால் உடல் எடை குறையும்.
பெருஞ்சீரகத்தை நீங்கள் மென்றும் சாப்பிடலாம். உடல் எடை அதிகமாக இருந்தால் சாப்பிட்ட பிறகு பெருஞ்சீரகத்தை தினசரி மென்று சாப்பிடலாம். இதன் மாற்றம் உங்களுக்கே தெரியும்.
பெருஞ்சீரகத்தை டீ வடிவில் குடிக்கலாம். இதற்கு தண்ணீர் சூடு பண்ணி, அதில் பெருஞ்சீரகம் மற்றும் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து டீ போல காலையில் வெறும் வயிற்றிலும் குடிக்கவும். இதன் மூலம் உடல் எடை குறையும்.
பெருஞ்சீரகத்தில் கால்சியம், வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம் போன்ற பண்புகள் உள்ளன. இவை உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல், புற்றுநோயைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.