PM Kisan scheme/PM kasan maandhan pension scheme: விவசாயிகளின் பொருளாதார நலன்களுக்காக மத்திய அரசு தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் (PM Kisan) கீழ், அரசாங்கம் தலா ரூ. 2000 வீதம் 3 தவணைகளில் உதவித்தொகையை வழங்குகிறது, அதாவது, விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு ரூ. 6000 நிதி உதவி கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் கணக்கில் இதுவரை 9 தவணைகள் அதாவது 18,000 ரூபாய் வந்துள்ளது. தற்போது விவசாயிகள் அடுத்த 10வது தவணைக்காக காத்திருக்கின்றனர். விவசாயிகளின் நிதி உதவிக்காகவும், முதியோரை பாதுகாப்பாக வைத்திருக்கவும், 'பிஎம் கிசான் மான்தன் யோஜனா' (PM kasan maandhan pension scheme) என்ற ஓய்வூதிய (Pension) திட்டத்தையும் அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.


விவசாயிகளுக்கு உறுதியான ஓய்வூதியம் கிடைக்கும்


பிரதமர் கிசான் (PM Kisan) மான்தன் யோஜனா திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பிறகு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இதில் உள்ள விசேஷம் என்னவென்றால், PM Kisan இல் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நீங்கள் இதற்கு எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டாம். நேரடியாக நீங்கள் பிரதம மந்திரி கிசான் மன்தன் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் பல சிறந்த அம்சங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன.


பிரதமர் கிசான்மான்தன் யோஜனா என்றால் என்ன


பிரதம மந்திரி கிசான் மான்தன் திட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, 60 வயதுக்கு பிறகு இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதாவது விவசாயிகளின் முதுமைக் காலத்தை பாதுகாக்க அரசு இதனைத் தொடங்கியுள்ளது. 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்த விவசாயியும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதன் கீழ், விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் வரை ஓய்வூதியம் கிடைக்கிறது.


மான்தன் யோஜனாவிற்கு தேவையான ஆவணங்கள்
1. ஆதார் அட்டை
2. அடையாள அட்டை
3. வயதுச் சான்றிதழ்
4. வருமானச் சான்றிதழ்
5. வயலின் ஆவணங்கள்
6. வங்கி கணக்கு பாஸ்புக்
7. மொபைல் எண்
8. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்


ALSO READ:Shocking: இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் PM Kisan தவணை கிடைக்காது


குடும்ப ஓய்வூதியமும் வழங்க வசதி


இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயி, அவரது வயதுக்கு ஏற்ப மாதாந்திர முதலீட்டில், 60 வயதுக்குப் பிறகு, குறைந்தபட்ச மாத உத்தரவாத ஓய்வூதியமாக ரூ.3000 அல்லது ஆண்டுக்கு ரூ.36,000 பெறுவார். இதற்கு, விவசாயிகள் மாதம் 55 முதல் 200 ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டும்.


பிரதமர் கிசான் மான்தன் திட்டத்தில், குடும்ப ஓய்வூதியம் வழங்குவதும் உள்ளது. கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், அவரது மனைவிக்கு 50 சதவீதம் ஓய்வூதியம் கிடைக்கும். குடும்ப ஓய்வூதியத்தில் மனைவி மட்டுமே சேர்க்கப்படுகிறார்.


PM Kisan பயனாளிகள் எவ்வாறு பயனடைவார்கள்?


பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு (Farmers) 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவியை அரசாங்கம் வழங்குகிறது. இந்தத் தொகை விவசாயிகளின் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். அதன் கணக்கு வைத்திருப்பவர்கள் ஓய்வூதியத் திட்டமான PM Kisan Manandhan இல் பங்கேற்றால், அவர்களின் பதிவு எளிதாக செய்யப்படும்.


மேலும், விவசாயி இந்த விருப்பத்தை தேர்வு செய்தால், ஓய்வூதிய திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படும் பங்களிப்பும் இந்த 3 தவணைகளில் பெறப்பட்ட தொகையிலிருந்து கழிக்கப்படும். அதாவது, இதற்கு PM Kisan கணக்கு வைத்திருப்பவர் தனியாக பணத்தை முதலீடு செய்ய வேண்டியதில்லை.


ALSO READ:PM Kisan திட்டத்தில் இவர்களுக்கெல்லாம் நன்மை கிடைக்காது? உங்களுக்குக் கிடைக்குமா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR