Lakpati Didi Scheme Tamil | பெண்களின் வருமானத்தை ஆண்டுக்கு ஒரு லட்சம் உயர்த்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடங்கிய திட்டம் தான் லக்பதி தீதி திட்டம். இந்த திட்டத்தில் சேரும் பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் கிடைக்கும். அத்துடன் சுயதொழில் பயிற்சி அரசு சார்பிலேயே கொடுக்கப்படும். சிறப்பாக செயல்படும் பெண்களுக்கு அரசு சார்பில் சிறப்பு ஊக்கம் கொடுக்கப்படுவதுடன், புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும். எந்த தொழில் வாய்ப்பும் இல்லை என நினைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். லக்பதி தீதி திட்டத்தில் எப்படி சேருவது? என்னென்ன தொழில் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன? என்பதை விரிவாக பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்பதி தீதி திட்டம் 


கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் பெண்களின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் நோக்கில் தொடங்கப்பட்ட திட்டம் தான் லக்பதி தீதி திட்டம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அந்த குழுக்களை சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த திட்டத்தில் கடன் உதவித் தொகை, தொழில் பயிற்சிகள் எல்லாம் கொடுக்கப்படுகின்றன. பெண்கள் ஒரு குழுவாக இயங்கி இந்த திட்டத்தின் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்ட முடியும். ஒரே கண்டிஷன் என்னவென்றால் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இருக்கும் பெண்கள் தான் இந்த திட்டத்தின் பயனாளிகள். அவர்கள் மட்டுமே லக்பதி தீதி திட்டத்தில் சேர முடியும்.


மேலும் படிக்க | கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் வரை: நவ.1 அன்று வர இருக்கும் மாற்றங்கள்!


லக்பதி தீதி : தொழில் பயிற்சிகள்


லக்பதிதீதி திட்டத்தில் பிளம்மிங் வேலை, எல்இடி பல்பு உற்பத்தி, டிரோன் பயிற்சி மற்றும் பழுது பார்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். அதாவது, இந்த மூன்று பயிற்சிகள் மட்டுமல்லாது கூடுதல் பயிற்சிகளும் வழங்கப்படும். அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தை தொடர்பு கொண்டால் இந்த திட்டம் குறித்த தெளிவான விளக்கம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 


லக்பதி திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள் 


ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமான வரிச் சான்றிதழ், பான்கார்டு ஆகிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். நீங்கள் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழு விவரங்களையும் கொடுக்க வேண்டும். 


லக்பதி தீதி திட்டத்தில் சேர தகுதி 


இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாநிலத்தில் பெண் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் இருக்கக்கூடாது. ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 


லக்பதி தீதி திட்டத்தில் எப்படி சேருவது?


லக்பதி தீதி திட்டத்தில் சேருவதற்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு செல்லுங்கள். இந்த திட்டத்திற்கு தேவையான ஆவணங்களான இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான்கார்டு ஆகியவற்றை எடுத்துச் செல்லவும். அங்கு திட்டத்தைப் பற்றி விரிவான தகவல்கள் வழங்கப்படும். தொழிற் பயிற்சி, மானியம், கடன் உதவி, வட்டியில்லா கடன் ஆகியவை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு திட்டத்தில் சேருபவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். அதன்படி, லக்பதி தீதி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுங்கள்.


இந்த திட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் சேர்ந்து லட்சாதிபதியாகியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விரைவில் இந்த திட்ட பயனாளிகளுக்கு கூடுதல் சலுகைகள், அறிவிப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | தீபாவளி இனிப்பு, காரம் தரமில்லையா? இப்போதே இந்த நம்பருக்கு புகார் அனுப்புங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ