புதுடெல்லி: வட இந்தியாவின் இந்தோ-கங்கை சமவெளி ( Indo-Gangetic Plain -IGP) பகுதியில் காற்றின் தரம் மிகவும் குறைவாக இருப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் ஏழு ஆண்டுகள் ஆயுட்காலத்தை இழக்க நேரிடும் என்று இன்று (வியாழக்கிழமை) வெளியான ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. வட இந்தியாவின் ஐ.ஜி.பி பிராந்தியத்தில் உள்ள பீகார், சண்டிகர், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அதில் அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிகாகோ பல்கலைக்கழகத்தில் (EPIC) எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக காற்று தர குறியீட்டின் (Air Quality Life Index (AQLI) புதிய பகுப்பாய்வின்படி, நுண்ணிய மாசுபாட்டிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலை பூர்த்தி செய்ய இந்தியா தவறிவிட்டது. அதனால் தான் அங்கு மிக மோசமான நிலையில் காற்றின் தரம் உள்ளது எனக் கூறப்பட்டு உள்ளது.


இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் வசிக்கும் பிராந்தியத்தில் 1998 முதல் 2016 வரை காற்றில் 72 சதவீதம் மாசுபாடு அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம். 1998 ஆம் ஆண்டில் இருந்த மக்களின் வாழ்க்கை காலல்,  காற்றில் ஏற்பட்ட மாசு தாக்கம் காரணமாக, இன்றைய நிலையில், அவர்களின் வாழ்க்கை பாதியாக இருக்கிறது. இந்த பகுதியில் வாழுபவர்கள் 3.7 ஆண்டு ஆயுட்காலத்தை இழக்கிறார்கள். 


இந்தியாவின் பெரும்பகுதிகளில் காற்று மாசுபாடு ஒரு சவாலாக இருந்தாலும், வட இந்தியாவின் ஐ.ஜி.பி பிராந்தியத்தில் அதிக அளவு காற்று மாசுபடுகின்றன. இதனால் தான் அங்கு வாழும் மக்களின் ஆயுட்காலத்தில் பாதிப்பு ஏற்ப்படுகிறது.