ஒருவர் சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை அவரது பிற்கால தேவையினை கருதி பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.  அவ்வாறு முதலீடு செய்யும் பணம் பலவேறு தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக அமைகிறது, இதுபோன்று நமது தேவைக்காக முதலீடு செய்ய பல திட்டங்கள் உள்ளது.  ஆனால் அவை எல்லாமே பாதுகாப்பானதா என்கிற கேள்வி அனைவருக்குள்ளும் ஏற்படும்.  அப்படி பாதுகாப்பான முதலீடு திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சல் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) திட்டம். சந்தேகத்திற்கு இடமின்றி இது நம்பகத்தன்மையுடன் செயல்படுவதோடு முதலீட்டாளர்களுக்கு நன்மைகளையும் வழங்குகிறது.  மேலும் இந்த திட்டம் சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்பானது, இதன் வட்டி விகிதங்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன.  தற்போது இதற்கு 7.1 சதவீத வருடாந்திர வட்டியை அஞ்சல் அலுவலகம் தருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தபால் அலுவலகம் அல்லது வங்கிக் கிளையில் வெறும் ரூ.500ல் இந்த பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கைத் திறக்கலாம்.  இதில் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம், இந்தக் கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும், மேலும் முதிர்ச்சியடைந்த பிறகு, 5-5 வருட அடைப்பில் மேலும் நீட்டிக்கும் வசதி உள்ளது.  ஒவ்வொரு மாதமும் பிபிஎஃப் கணக்கில் ரூ.12,500 டெபாசிட் செய்து 15 வருடங்கள் பராமரித்தால், முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.40.68 லட்சம் கிடைக்கும். இதில், உங்களின் மொத்த முதலீடு ரூ.22.50 லட்சமாக இருக்கும், அதே சமயம் ரூ.18.18 லட்சம் உங்கள் வட்டி வருமானமாக இருக்கும்.  



மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, அகவிலைப்படியில் பம்பர் அதிகரிப்பு


இந்த திட்டத்தில் நீங்கள் அதிக பலன்களை பெற விரும்பினால் 15 வருடங்கள் கழித்து 5-5 வருடங்களுக்கு இரண்டு மடங்கு அதிகரிக்க வேண்டும்.  அதாவது, இப்போது உங்கள் முதலீட்டு காலம் 25 ஆண்டுகளாகிவிட்டது, எனவே 25 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்த கார்ப்பஸ் ரூ.1.03 கோடியாக இருக்கும்.  இந்தக் காலகட்டத்தில் உங்களின் மொத்த முதலீடு ரூ. 37.50 லட்சமாக இருக்கும், அதே சமயம் வட்டி வருமானமாக ரூ.65.58 லட்சத்தைப் பெற முடியும்.  முதிர்ச்சிக்கு பின்னர் கணக்கை நீட்டிக்க விரும்பினால் ஒரு வருடத்திற்கு முன் இதுகுறித்த விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும்.  இந்த திட்டத்தில் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளை பெறுவதோடு, ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு விலக்கு பெறலாம்.


மேலும் படிக்க | EPFO உறுப்பினர்கள் எச்சரிக்கை! PF தொடர்பான இந்த வேலையை விரைவில் செய்யுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ