PPF-Sukanya Samriddhi Yojana வட்டி விகிதம்: நீங்களும் சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (SSY) அல்லது PPF ஆகிய சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். 12 சிறுசேமிப்பு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன.  இந்த திட்டங்களைப் பொறுத்தவரை, தபால் அலுவலகம் முதல் வங்கி வரை கணக்கு துவங்கப்படுகிறது. இந்த 12 திட்டங்களில், PPF (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டமும் ஒன்று. மகள்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக செல்வ மகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி விகிதங்கள் மதிப்பாய்வு 


சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. நீண்ட காலமாக, அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி உயர்த்தப்படவில்லை. மே மாதம் முதல் தற்போது வரை, ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் 2.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, பல்வேறு வங்கிகள் கடனுடன் FD மீதான வட்டியையும் அதிகரித்தன. ஆனால் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை அரசு அதிகரிக்கவில்லை.


வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது


டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் காலாண்டில் வட்டி விகிதத்தை அரசாங்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வட்டி விகிதத்தை உயர்த்த மத்திய அரசு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த அறிவிப்பு இந்த வாரத்திலேயே வெளியாகலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நலத் திட்டங்களில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில், பிரதமரின் ஏழைகளுக்கான நலத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச ரேஷன் வழங்குவதற்கான காலக்கெடு டிசம்பர் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஜனவரி 1, 2023: ஜிஎஸ்டி முதல் சிலிண்டர் வரை பல மாற்றங்கள், சாமானியர்களுக்கு சாதகமா? பாதகமா


பிபிஎஃப் மீதான வட்டி 7.10 சதவீதம்


இதற்குப் பிறகு, சுகன்யா சம்ரிதி என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் மற்றும் பிபிஎப் மீதான வட்டி விகிதத்தை அதிகரிப்பதன் மூலம், அரசு புத்தாண்டு பரிசை மக்களுக்கு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த மே மாதம் மத்திய அரசு திருத்தியது. தற்போது, ​​சுகன்யா சம்ரித்திக்கு 7.6 சதவீதமும், பிபிஎப்பில் 7.10 சதவீதமும் வட்டி கிடைக்கிறது. செப்டம்பரில், சில சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. ஆனால் சுகன்யா சம்ரிதி திட்ட வட்டியில் எந்த மாற்றமும் இல்லை.


இந்த வாரம் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள நிதியமைச்சகத்தின் ஆய்வுக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் மதிப்பாய்வு செய்கிறது.


மேலும் படிக்க | Free Ration Scheme: நீங்களும் இலவச ரேஷன் பெறனுமா?அப்போ இத மட்டும் பண்ணுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ