சாமானிய ஏழை எளிய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக உணவு பாதுகாப்பு சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் மாதம் தோறும் ஒரு நபருக்கு தலா கிலோ உணவு தானியம் மானிய விலையில் பெறுகிறார்கள். அத்துடன் கோதுமை, அரிசி, உப்பு போன்ற பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாட்டின் 80 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடரும்.
இந்த நிலையில், நீங்கள் மலிவான அல்லது இலவச ரேஷன் பொருட்களை பெற விரும்பினால், இதற்கு முதலில் நீங்கள் ஒரு ரேஷன் கார்டைப் பெற வேண்டியது அவசியமாகும். ஆம், இதை நீங்கள் வீட்டிலேயே உருவாக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் இலவச ரேஷனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அதன் செயல்முறை என்ன என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க | பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே ஊழியர்கள் ஓய்வூதியத்தை பெற முடியுமா?
ரேஷன் கார்டு தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்:-
* உங்களிடம் ரேஷன் கார்டு இல்லையென்றால், அதை உருவாக்க, முதலில் மாநில உணவுப் பொருள் வழங்கல் மற்றும் வாடிக்கையாளர் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
* இதன் பின்னர் நீங்கள் ரேஷன் கார்டு விண்ணப்பத்திற்கான இணைப்பைப் பெறுவீர்கள், அதைக் கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு, விண்ணப்பப் படிவம் உங்கள் முன் தோன்றும், அதை நிரப்பவும்.
* இதில், உங்கள் பெயர், ஆதார் எண், இருப்பிடம் போன்ற முக்கிய தகவல்களை உள்ளிடவும்.
* படிவம் நிரப்பப்பட்டதும், நீங்கள் கோரிய ஆவணங்களை இங்கே பதிவேற்ற வேண்டும்.
* இதில், விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை, முகவரி சான்று, புகைப்படம் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* இப்போது கேட்கப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு, ஒரு ஸ்லிப்பை நீங்கள் பெறுவீர்கள், அதை பிரிண்ட் அவுட் எடுத்து ரேஷன் கார்டு வரும் வரை வைத்திருக்க வேண்டும்.
* இப்போது அனைத்து விவரங்களும் வெரிபிகேஷன் செய்யப்படும், அதன் பின் உங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும்.
மேலும் படிக்க | ரூ.200 முதலீடு செய்தால் ரூ.28 லட்சம் கேரண்டி! LIC'யின் சூப்பர் திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ