தான் ஆன்லைனில் படிப்பதாகக்கூறி பப்ஜி கேம் விளையாடி அப்பா வங்கி கணக்கில் இருந்த ₹.16 லட்சத்தை காலி செய்த 17வயது சிறுவன்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப்பை சேர்ந்த 17 வயது சிறுவன் கொரோனா ஊரடங்கில் வீட்டில் ஆன்-லைன் மூலம் படிப்பதாக கூறி பெற்றோரின் ஸ்மார்ட் போனில் பப்ஜி விளையாடியுள்ளான். சிறுவன் தந்தையின் மருத்துவ செலவுக்காக  ரூ.16 லட்சத்தினை வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளதுடன், மணைவின் PF பணத்தையும் அதில் சேமித்து வைத்துள்ளனர். இந்த வங்கி கணக்கு தொடர்பான அனைத்து தரவுகளையும் தன்னுடைய மொபைல் போனிலேயே வைத்திருந்து உள்ளார்.


இதனை தெரிந்துக்கொண்ட சிறுவன் பப்ஜி விளையாட்டு விளம்பரங்களில் மயங்கி சிறுவன் வங்கி கணக்கை பயன்படுத்தி விளையாடுவதற்கு ஆயுதங்களை வாங்கியிருக்கிறான். வங்கியிலிருந்து பணம் செல்வதை பெற்றோர்களிடம் மறைக்க அவ்வப்போது செல்போன்களில் வரும் குறுஞ்செய்தியை நீக்கியுள்ளான். இறுதில் வங்கிக்கு செல்ல பெற்றோர் அவர்களது தொலைபேசியை வாங்கிய போது அவர்களுடைய கணக்கில் காசு இல்லாதது தெரியவந்து உள்ளது. 


READ | பாகிஸ்தானில் நடக்கும் அட்டூழியம், முடக்கப்படும் ஊடக சுதந்திரம்!!


இதனையடுத்து கடும் கோபம் அடைந்த தந்தை மகனை நீ படித்தது போதும் என அங்குள்ள மோட்டார் சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் கடையில் வேலையில் சேர்ந்து உள்ளார். உலகம் முழுவதும் பப்ஜி கேம் அதிகமாக பணம் சம்பாதிக்கும் கேமாக இருக்கிறது. இதற்காக அதன் வலையில் சிக்குபவார்களின் குடலை எப்படி உருவுகிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சியாகும்.


ஏற்கனவே, பப்ஜி கேம் குழந்தைகள் மத்தியில் கொடூரத்தின் விதையை விதைக்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. சீன செயலிகள் தடை செய்யப்பட்டதும் பப்ஜியையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து இருக்கிறது.