பாகிஸ்தானில் நடக்கும் அட்டூழியம், முடக்கப்படும் ஊடக சுதந்திரம்!!

பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்றும் இப்படிப்பட்ட சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகின்றன என்றும் RSF-ன் ஆசியா பசிபிக் டெஸ்கின் தலைவர் டேனியல் பேஸ்டர்ட் கூறினார்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jul 4, 2020, 02:14 PM IST
பாகிஸ்தானில் நடக்கும் அட்டூழியம், முடக்கப்படும் ஊடக சுதந்திரம்!!
Zee Media

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிலுள்ள (Pakistan) இம்ரான் கான் (Imran Khan) அரசாங்கத்தில் ஊடகங்கள் (Media) சுதந்திரமாக இல்லை என்பது உலகறிந்த உண்மையாகும். தற்போது, பாகிஸ்தானின் இரண்டு பத்திரிக்கையாளர்கள் (Journalists) கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் தனிமைப்படுத்தும் மையங்களின் (Quarantine Centre) உண்மை நிலவரத்தை நாட்டின் முன் வைக்க முயற்சி செய்ததே இவர்கள் செய்த தவறாகும். மூன்று நாட்களுக்கு சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த இவர்கள், அடித்து துன்புறுத்தப்பட்டனர்.

ரிபோர்டர்ஸ் விதௌட் பார்டர்சின் அறிக்கையின் படி, உருது மொழி செய்தி சேனலான சமா நியூஸ் டிவி-யின் (Samaa News TV) பத்திரிக்கையாளரான சயித் அலி அசாகஸாய் (Saeed Ali Achakzai) மற்றும் பஷ்தூன் மொழியின் கைபர் நியூஸ் டிவி-யின் (Khyber News TV) அப்துல் மதீன் அசாகஸாய் (Abdul Mateen Achakzai) ஆகிய இருவரும் ஆஃப்கான் எல்லையில் உள்ள சமன் நகரில் ஃப்ரண்டியர் கார்ப்ஸ் கமாண்ட் மையத்திற்கு அழைக்கப்பட்டார்கள். இங்கு இவர்கள் இருவரும் மூன்று நாட்களுக்கு சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

Also Read: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மெக்மூத் குரேஷிக்கு Coronavirus பாசிடிவ்

 தனக்கு தொடர்ந்து வாட்ஸாப்பில் மிரட்டல்கள் வந்துகொண்டிருந்ததாக அப்துல் மதீன் அசாகஸாய் கூறியுள்ளார். தனிமைப்படுத்தும் மையங்களின் உண்மையான நிலையைப் பற்றி அவர்கள் செய்திகளை திரட்டியதால், துணை ராணுவப் படையின் துணை ஆணையர் கோவத்தில் இருந்தார் என தெரிய வருகிறது. RWF, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பலுசிஸ்தான் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ‘ நாங்கள் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பத்திரிக்கையாளர்களின் அறிக்கையால் கோவமுற்று அவர்களை ராணுவப் படைகள் துன்புறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என RSF-ன் ஆசிய பசிபிக் டெஸ்கின் தலைவர் டேனியல் பேஸ்டர்ட் கூறியுள்ளார். பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்றும் இப்படிப்பட்ட சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானில் பல இடங்களில், குறிப்பாக, சமனில், பத்திரிக்கையாளர்கள் இதற்கு முன்னரும் இப்படி துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசின் தவறுகளை தட்டிக்கேட்கும் குரல்களை அடக்கும் அட்டூழியம் பாகிஸ்தானின் வழக்கமாகி விட்டது.

Also Read: பயத்தில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்