ஜம்முவில் PUBG மொபைல் பிளேயர், ஓய்வு இல்லாமல் 10 நாட்கள் விளையாடிய நபர் மனநலப்பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய காலத்தில் உள்ள இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் சில மொபைல் விளையாட்டுகளில் PUBG என்ற மொபை விளையாட்டு தீவிரமடைந்து வருகிறது. இதை அதிக நேரம் விளையாடுவதால் அதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் உண்டு. அதுபோல பப்ஜி விளையாடிய ஒருவரின் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்ட சம்பவம் ஜம்முவில் நிகழ்ந்துள்ளது.


ஜம்முவை சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவர் கடந்த 10 நாள்களுக்கு முன்னால் அவரது ஸ்மார்ட்போனில் PUBG-யை இன்ஸ்டால் செய்து விளையாடத் தொடங்கியிருக்கிறார். முதல் முறையே அவருக்கு மிகவும் பிடித்து விடவே ஆர்வத்தில் தொடர்ந்து விளையாட ஆரம்பித்திருக்கிறார். அப்படிக் கடந்த பத்து நாள்களும் ஓய்வே இல்லாமல் விளையாடியதால் அவரது மனநிலை சமநிலையை இழந்திருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் அவர் தன்னைத் தானே கடுமையாகத் தாக்கிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார். 


அதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ``அவர் தற்பொழுது நிலையற்றவராக இருக்கிறார், அவரது மனம் சமநிலையை ஓரளவுக்கு இழந்திருக்கிறது " எனப் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இயல்பான நிலைக்குத் திரும்ப சில நாள்கள் ஆகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


இது போன்று ஒரு சம்பவம் ஜம்முவில் நடப்பது முதல் முறையல்ல இது ஆறாவது சம்பவம் ஆகும். மேலும், இதற்குச் சிறுவர்கள் வேகமாக அடிமையாகிவிடுகிறார்கள் என்பதால் உள்ளூர்வாசிகள் PUBG மொபைல் கேம் தடை செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.