புதுடெல்லி: ஒரு நபர் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து தனக்காக ஒரு தங்க முகமூடியை (Gold Mask) உருவாக்கியுள்ளார். ஒருபக்கம் விலை உயர்ந்த முகமூடியாக இருந்தாலும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க இந்த விலையுயர்ந்த முகமூடி போதுமானதா? இது போன்றவற்றால் மூச்சு விடுவதில் ஏதேனும் சிரமம் இருக்குமா? போன்று சாதரணமாக மனதில் எழும் உங்கள் கேள்விகளுக்கும் இங்கே விடை காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தனித்துவமான தங்க முககவசத்தை மகாராஷ்டிராவின் (Maharashtra) புனே மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தயாரித்துள்ளார். மேலும் இதன் மதிப்பு சுமார் மூன்று லட்சம் ரூபாய் ஆகும்.


இதையும் படியுங்கள் | கைத்தறி பட்டு முகமூடியை அணிந்து திருமணம் செய்த தம்பதியினர்.. குவியும் பாராட்டு


புனே (Pune) மாவட்டத்தில் பிம்ப்ரி-சின்ச்வாட்டில் வசிக்கும் ஷங்கர் குராடே இவர்கள், தனக்கென ஒரு தனித்துவமான தங்க முகமூடியை உருவாக்க ரூ .2.89 லட்சம் செலவு செய்துள்ளார்.


 



இது ஒரு மெல்லிய முகமூடி மற்றும் சிறந்த துளைகளைக் கொண்டிருப்பதாக ஷங்கர் குராடே கூறினார். எனவே சுவாசிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கோவிட் -19 வைரஸ் (COVID-19) தொற்றைத் தடுக்க இது போதுமானதா என்று எனக்குத் தெரியவில்லை எனக் கூறினார்.


இதையும் படியுங்கள் | லேசர் ஒளி சோதனை.....COVID-19 க்கு எதிராக எந்த முகமூடி உங்களைப் பாதுகாக்கும்?


தங்க நகைகளை அணிந்துக்கொள்வதில் ஷங்கர் குராடேவுக்கு மிகவும் விருப்பம். அவர் எப்பொழுதும் எங்கு சென்றாலும் தங்க நகைகளை அணிந்துக்கொண்டு தான் இருப்பார்.