ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரக பெயர்ச்சிகளில் ஒன்று ராகு - கேது பெயர்ச்சி ஆகும். இந்த கிரகங்கள் மட்டும் மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் எதிர் திசையில் அதாவது கடிகார சுற்றுக்கு எதிர் திசையில் சுற்றக்கூடிய கிரகங்கள் ஆகும். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பங்குனி 29ம் தேதி (ஏப்ரல் 12) பிற்பகல் 1.48 மணியளவில் ராகு- கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. கிரகங்களில் சனி பகவானுக்கு பிறகு மெதுவான இயக்கம் கொண்ட கிரகங்கள் ராகு மற்றும் கேது ஆகும். அதுமட்டுமின்றி, இந்த கிரகங்கள் எப்போதும் எதிர் திசையில் நகர்வதால், இவற்றின் அசுப நிலை மனிதனின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக ஜாதகத்தில் ராகு சுப ஸ்தானத்தில் இருந்தால், வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். மறுபுறம், அது ஒரு அசுபமான நிலையில் இருந்தால், இன்னல்கள் சந்திக்க நேரிடும். மேஷ ராசியில் ராகு சஞ்சரிக்கும் போது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதை இன்று நாம் காண்போம்.


மேஷம்: மேஷ ராசியினர் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல்நிலையில் கொஞ்சம் அக்கறை காட்டவும். பணியிடத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். பேச்சில் கனிவும் தேவை. முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்மறையான எண்ணங்களிலிருந்தும், மனிதர்களிடமிருந்தும் விலகி இருங்கள்.


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு உடல்நிலையில் கொஞ்சம் கவனம் தேவை. பணியிடத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம். முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்மறையான எண்ணங்களிலிருந்தும், மனிதர்களிடமிருந்தும் விலகி இருங்கள்.


மேலும் படிக்க | ஏப்ரல் 6 ஆம் தேதி இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 


சிம்மம்: உத்தியோகம் விஷயங்களில் உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். புதிதாக தொழில் தொடங்க வேண்டாம். வீட்டில் உள்ள பெரியவரின் உடல்நிலை குறித்து கவலைகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணைக்கு உடல்நலப் பிரச்சனை வரலாம்.


துலாம்: உங்கள் வாழ்க்கையில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம். உடல்நலம், நிதி நிலை மற்றும் உறவுகள் பாதிக்கப்படலாம். உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். சில பிரச்சினைகளால் மனம் சஞ்சலத்துடன் இருப்பீர்கள்.


மீனம்: அதிக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சொத்தை வாங்கும் முன், அதற்கான ஆவணங்களை நன்றாக படித்துப் பார்க்கவும். வீண் செலவுகளைத் தவிர்த்து சேமிப்பை அதிகரிக்கவும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. வீடு, குடும்பம் மற்றும் பணியிடத்தில் சாதகமான சூழல் இருக்கும். உடல் நலம் பாதிக்ககூடும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | செவ்வாயின் ராசி மாற்றத்தால் செழிக்கப்போகும் ராசிகள்: இவர்கள் மீது அதிர்ஷ்ட மழை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR