செவ்வாயின் ராசி மாற்றத்தால் செழிக்கப்போகும் ராசிகள்: இவர்கள் மீது அதிர்ஷ்ட மழை

Mars Transit: செவ்வாய் பெயர்ச்சியால் நல்ல பலன்களை அடையப்போகும் 3 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2022, 11:24 AM IST
  • வியாபாரிகள் நல்ல லாபம் பெறலாம்.
  • இந்த நேரத்தில் உங்கள் பணி செய்யும் திறன் மேம்படும்.
  • அலுவலகத்தில் உங்களுக்கு அதிக பாராட்டுகள் கிடைக்கும்.
செவ்வாயின் ராசி மாற்றத்தால் செழிக்கப்போகும் ராசிகள்: இவர்கள் மீது அதிர்ஷ்ட மழை title=

வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். ஆனால், சிலர் இதனால் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  

கிரகங்களின் அதிபதியான செவ்வாய் ஏப்ரல் 7ஆம் தேதி கும்ப ராசி-யில் பிரவேசிக்க உள்ளார். செவ்வாய் கிரகத்தின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். செவ்வாய் பெயர்ச்சியால் நல்ல பலன்களை அடையப்போகும் 3 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

மேஷம்:
செவ்வாய் மேஷத்தின் 11 ஆம் வீட்டில் பிரவேசிக்கிறார். இது வருமானம் மற்றும் லாபத்தின் ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் நல்ல லாபம் பெறலாம். இத்துடன் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க சரியான நேரமாக இது இருக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு இந்த நேரம் சாதகமானது. மேஷத்தை ஆளும் கிரகம் செவ்வாய். எனவே செவ்வாயின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | சனியின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன் தரும் 
ரிஷபம்:
செவ்வாய்ப் பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு மிகவும் நன்மை பயக்கும். செவ்வாய் உங்கள் பத்தாம் வீட்டில் பெயர்ச்சியாவார். இது நமது கர்மா மற்றும் தொழில், வேலைக்கான ஸ்தானமாகும். இந்த காலத்தில், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் பணி செய்யும் திறன் மேம்படும். அலுவலகத்தில் உங்களுக்கு அதிக பாராட்டுகள் கிடைக்கும். 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களின் ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கும். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்துக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஆகையால், இந்த காலத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். இந்த காலகட்டத்தில் செய்யும் முதலீடுகளின் பலன்கள் எதிர்காலத்தில் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்கள் வெற்றி மழையில் நனைவார்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News