ராகுவின் மாற்றத்தால் இந்த ராசிக்காரகளின் தலைவிதி தலைகீழாக மாறும், மகிழ்ச்சி பொங்கும்
Astrology: நிழல் கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கின்றன.
ஜோதிட சாஸ்திரத்தில் 9 கிரகங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. இரு கிரகங்கள் நிழல் கிரகங்களாக உள்ளன. இந்த நிழல் கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கின்றன.
அசுபமான இடத்தில் ராகு அமைந்தால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ஒரு நபர் ராகுவின் தாக்கத்திற்கு உட்பட்டால் அவர் எதிர்மறை எண்ணங்களால் சூழப்படுகிறார். ராகு மிதுன ராசியில் உச்சம் பெற்று தனுசு ராசியில் தளர்ச்சி அடைகிறார்.
18 மாதங்களுக்குப் பிறகு ராகு தனது ராசியை மாற்றவுள்ளார். மேலும் ராகு எப்போதும் பின்னோக்கி நகர்கிறது. ஏப்ரல் 12 முதல் ராகு மேஷ ராசியில் சஞ்சரிப்பார். ராகுவின் இந்த மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் சுப பலன்களை அனுபவிப்பார்கள் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மிதுனம்:
ஜோதிட சாஸ்திரப்படி மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு சஞ்சாரம் சுப பலன்களைத் தரப்போகிறது. இவர்களுக்கு பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். ஊதியம் உயர அதிக வாய்ப்புகள் உள்ளன. பண ஆதாயம் கூடும்.
பணம் விருத்தியடைய பல புதிய வழிகள் திறக்கும். இந்த காலத்தில் தைரியமாக பணத்தை எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். லாபம் பெருகும். பொருளாதார நிலை மேம்படும்.
மேலும் படிக்க | இன்னும் 3 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி சாதகமாக அமையப் போகிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானம் கூடி வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும்.
வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது நல்ல காலம். செல்வம் பெரும், லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளுக்கு பல வழிகள் திறக்கும்.
தனுசு ராசி:
தனுசு ராசிக்காரர்கள் ராகு சஞ்சாரத்தில் நல்ல வருமானம் பெறுவார்கள். இந்த நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் அதிகம் அலையாமல் இருப்பது நல்லது. சரியாக யோசித்து செயல்பட்டால், தனுசு ராசிக்காரர்கள் பெரிய உச்சங்களை தொடலாம்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரமும் மிகவும் சாதகமாக இருக்கும். பயணத்திற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த பயணம் நல்ல லாபங்களை அளிக்கும். பயணத்தால் பண ஆதாயம் கிடைக்கும். இந்த நேரத்தில் பணியிட மாற்றமும் ஏற்படலாம். கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பல வித சாதனைகளை செய்ய முடியும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மகா சிவராத்திரியில் இந்த 4 ராசிக்கு சிவபெருமானின் சிறப்பு அருள் கிடைக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR