முதல் முறையாக ஆன்லைனில் ரயில்வே தேர்வு! முழு விவரம் உள்ளே!
ரயில்வேயில் காலியாக உள்ள என்ஜின் டிரைவர் பணியிடங்களுக்கும், தொழில்நுட்ப நிபுணர்கள் பணியிடங்களுக்கும் முதல் முறையாக ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வு வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

தேர்வு நடைபெறுவதற்கு 4 நாள்களுக்கு முன்னர் மின்னணு நுழைவுச் சீட்டை ரயில்வே அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு 1 மணி நேரம் நடைபெறும். மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் 80 நிமிடங்கள் வரை தேர்வு எழுத அனுமதியளிக்கப்படும்.
இந்த தேர்வில் மொத்தம் 75 வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தவறான விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மேலும் தேர்வு நடைபெறும் இடம், தேதி, காலம் ஆகியவற்றை ரயில்வே அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.