புதுடெல்லி: ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. கொரோனா நெருக்கடியின் போதும், அதற்குப் பிறகு பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. தற்போது பெரும்பாலான எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள் இயங்கி வருகின்றன. ஆனால் சிறப்பு ரயில்களின் இயக்கம் விரைவில் நிறுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சிறப்பு ரயில் சேவைகள் விரைவில் நிறுத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்திய ரயில்வே (Indian railway) சிறப்பு ரயில்களில், சாதாரண ரயில்களை விட, 30 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.


ரயில்வே அமைச்சர் (Railway Minister) அஸ்வினி வைஷ்ணவ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது, ​​கோவிட் நெறிமுறையின்படி, சிறப்பு  ரயில்களை ரயில்வே இயக்கத் தொடங்கியுள்ளது. ரயில்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தி பயணிகளுக்கு வசதி செய்வதே இதன் நோக்கம். ரயில்வே அமைச்சரின் கூற்றுப்படி, தற்போது 95 சதவீத மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியுள்ளன. இந்த ரயில்களில் சுமார் 25 சதவீதம் சிறப்பு ரயில்களாக இயங்குகின்றன.


ALSO READ | ரயில் டிக்கெட் தொலைந்து விட்டதா; டூப்ளிகேட் ரயில் டிக்கெட் பெறும் முறை


சிறப்பு ரயில்களின் கட்டணம் சாதாரண ரயிலை விட அதிகம். பயணிகள் ரயில்களில் சுமார் 70 சதவீத ரயில்களுக்கு மெயில் எக்ஸ்பிரஸ் அந்தஸ்தை ரயில்வே வழங்கியுள்ளது. இவற்றில் பயணம் செய்ய பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன், இந்திய ரயில்வே சுமார் 1700 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கியது. இதில் பெரும்பாலான ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன. கொரோனா நெருக்கடிக்கு முன்பு சுமார் 3500 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன, இதில் 1000 பயணிகள் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.


ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!


தற்போது ரயில்வேயில் கோவிட் பாதிப்பிற்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது ரயில்வே பயணிகளுக்கு பெரும் நன்மை பயக்கும். அதாவது, இந்த அறிவிப்புக்குப் பிறகு, சாதாரண ரயில்களில் பயணம் செய்ய குறைந்த கட்டணத்தை செலுத்தினால் போதும். ஆனால் பயணத்தின் போது பயணிகள் கோவிட் நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | IRCTC வழங்கும் 'Alert' சேவை; இனி கன்பர்ம் டிக்கெட் பெறுவது மிக எளிது..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR