புதுடெல்லி: இந்திய ரயில்வேயின் புதுமையான முயற்சி ஒன்று பரவலான பாராட்டுக்களை பெற்றுத் தந்ததோடு, லட்சக்கணக்கான ரூபாய் வருமானத்தையும் கொடுத்துள்ளது.
சாக்லேட் மற்றும் பிற உணவு பொருட்களை கொண்டு செல்ல, பயன்படுத்தப்படமால் இருந்த ஏசி பெட்டிகளை பயன்படுத்திய புதுமையான முயற்ச்டி குறித்து பதிவுசெய்துள்ள தென் மேற்கு ரயில்வே, "ரயிலை இனிப்பாக மாற்றிய புதுமை" என்று தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 183 ஏசி பெட்டிகள் கொண்ட பார்சல் எக்ஸ்பிரஸ், 163 டன் சாக்லேட்டுகளை சுமந்து, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8, 2021) அன்று, வாஸ்கோடகாமா (கோவா) முதல் ஒக்லா (டெல்லி) வரை 2,168 கிமீ தூரம் பயணத்தை தனது பயணத்தை தொடங்கியது.
Innovation that turned Train Sweet:
For the 1 st time in SWR,idle ICF AC 2-Tier&3-Tier coaches used for Reefer Express of chocolate.
This timetabled parcel Express of 18 AC coaches , carrying 163 tonnes, left from Vasco today to Okhla,Delhi(2168 Km) @drmubl #HungryForCargo pic.twitter.com/7hmf7cPjSW— South Western Railway (@SWRRLY) October 8, 2021
ஹூப்பள்ளி பிரிவின் வணிக மேம்பாட்டுப் பிரிவின் (BDU) சந்தைப்படுத்தல் முயற்சிகளால், பொதுவாக சாலை மூலம் சாக்லேட்டுகள் போன்ற பொருட்கள் அனுப்படும் நிலையில், இந்த புதுமை முயற்சியினால் இந்திய ரயில்வேக்கு ரூ .12.83 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
ALSO READ | Vehicle Scrappage Policy: பழைய காரின் பதிவு கட்டணம் 8 மடங்கு உயர்வு..!!
BDU இன் முயற்சியை பாராட்டி, ஹூப்பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர், அரவிந்த் மல்கடே, ரயில்வே துறை விரைவான, சுமுகமான மற்றும் செலவு குறைந்த சேவைகளைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களை ஊக்குவித்து வருகிறது என பாராட்டினார்.
ALSO READ | நிலக்கரி பற்றாக்குறை: இந்தியாவும் ‘இருளில்’ மூழ்குமா... மத்திய அரசு கூறுவது என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR