பயணிகள் ரயிலில் தூங்குவதற்கான ரயில்வேயின் புதிய விதிகள்!
இரவு நேரத்தில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 10 மணிக்கு மேல் சத்தமாக பேசுவது, சத்தமாக பாடல்கள் கேட்பது போன்றவற்றை செய்யக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கேற்ப ரயில்வேத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரயில் பயணத்தில் எப்போதும் கவனம் தேவை, நாம் அறியாமல் செய்யக்கூடிய சிறு தவறுகளும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும், அதனால் எப்ப்போதும் ரயில் பயணம் மேற்கொள்ளும்போது ரயில்வேயின் விதிகளை மனதில் வைத்துக்கொண்டு பயணம் செய்வது அவசியமான ஒன்று. ரயில்வே துறை ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்வது, ஸ்டேஷன் மாற்றுவது என பல வசதிகளை செய்துள்ளது, தற்போது இரவு நேரத்தில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க சில விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் விதித்துள்ளது.
ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இரவு நேரத்தில் தூங்கும் சமயத்தில் நமது இருக்கையிலோ அல்லது கோச்சிலோ பயணம் செய்யும் பயணிகள் யாரும் மொபைலில் சத்தமாக பேசக்கூடாது, இரவு நேரத்தில் சத்தம் போட்டு போன் பேசுவதால் அது மற்ற பயணிகளின் தூக்கத்திற்கு இடையூறாக இருக்கும் அதனால் அப்படி சத்தமாக மொபைலில் பயணிகள் பேசக்கூடாது. அதேபோல இரவு நேர பயணத்தில் அனைவரையும் தொந்தரவு செய்யும்படி சத்தமாக பாடல்கள் கேட்கக்கூடாது, வேண்டுமென்றல் யாருக்கும் கேட்காதவாறு ஹெட்செட் போட்டுகொண்டு பாட்டு கேட்கலாம், அப்படியில்லாமல் அதிக சத்தம் வைத்துக்கொண்டு பயணிகள் பாட்டு கேட்கக்கூடாது. மேலும் இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் எவரும் மொபைலில் சத்தமாக பேசினாலோ அல்லது சத்தமாக பாடல்களை கேட்டாலோ அல்லது தூக்கத்தை கெடுக்கும் விதமாக எதுவும் செய்தால் ரயில்வே நிர்வாகம் அந்த பயணியின் மீது நடவடிக்கை எடுக்கும் என்று ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இரவுநேர பயணத்தில் பயணிகள் நிம்மதியாக தூங்க வேண்டும் அவர்களுக்கு எவ்வித இடையூறையும் சக பயணிகள் ஏற்படுத்தக்கூடாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | YES Bank-க்கு பெரும் பின்னடைவு: நியாயமற்ற கடன் பரிவர்த்தனைகள் மீது நடவடிக்கை
சமீப காலங்களாகவே தொடர்ந்து ரயில்வே துறைக்கு இரவு நேரங்களில் பயணிகளால் நிம்மதியாக தூங்கமுடியவில்லை என்கிற புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. இப்போது ரயிலில் ஒன்றாக பயணிக்கும் நண்பர்களோ அல்லது உறவினர்களோ ஒன்றாக சேர்ந்ததும் இரவில் சத்தமாக பேசி சிரிப்பது அல்லது பாடல்களை சத்தமாக வைத்து கேட்பது போன்றவற்றை செய்கின்றனர் என்றும் சில பயணிகள் ரயில்வே எஸ்கார்ட் அல்லது பராமரிப்பு ஊழியர்களிடம் சத்தமாக பேசுவதாகவும், ஊழியர்களும் அடிக்கடி சத்தம் போடுவதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது. மேலும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இரவு 10 மணிக்கு மேலும் மின்விளக்குகளை அணைக்காமல் எரியவிடுவதால் இது சக பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்றும் புகார்கள் வந்துள்ளது. இதுபோன்ற புகார்களை சரிசெய்யும் வகையில் தற்போது ரயில்வே நிர்வாகம் சில விதிகளை விதித்திருக்கிறது.
மேலும் படிக்க | 50% வரை குறைந்த விமான கட்டணம்; வெறும் 1000 ரூபாய்க்கு பயணம் செய்யலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ