Ramadan 2023: ரமலான் நோன்பு இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ரமலானை முன்னிட்டு ஒரு மாதம் நோன்பைக் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், காலையிலும் இரவிலும் சுவையான உணவை உண்ண வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரமலானின் 12-14 மணிநேர நோன்பு இடைவிடாதது என்பது உங்களுக்குத் தெரியுமா? ரமலான் என்பது ஒரு மாதத்திற்கு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு இடையில் எதையும் சாப்பிடவோ அல்லது குடிப்பதையோ தவிர்க்கும் ஒரு காலமாகும். இஃப்தார் என கூறப்படும், மாலை உணவில் நோன்பு திறக்கப்படுகிறது. 


ரமலானின் இடைவிடாத நோன்பு அதன் சொந்த நன்மைகளைக் கொண்டுள்ளது. நோன்பு இருப்பதன் மூலம் மக்கள் தங்கள் உடலின் செரிமான அமைப்புகளை மீட்டமைக்கலாம், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம் மற்றும் எடையைக் குறைக்கலாம். புனித ரமலான் மாதத்தில் இடைவிடாத நோன்பினால் ஏற்படும் வேறு சில ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. மறுப்புறம், ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அறவே செய்யக்கூடாத செயல்களும் உள்ளன. அதில், செய்யவே கூடாத ஐந்து செயல்களை இங்கு காணலாம். 


1. உணவு


ரமலான் மாதத்தில், இஸ்லாமியர்கள் விடியற்காலையில் இருந்து மாலை வரை நோன்பு இருக்க வேண்டும். உணவு முதல் புதினா வரை எதையும் சாப்பிடக் கூடாது. ரமலான் நோன்பைக் கடைப்பிடிப்பவர்களுக்கு, விடியலுக்கு முன் காலை உணவை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் சூரியன் உதித்தவுடன், அது நோன்பு திறக்கும் நேரமாகும்.


2. குடிப்பழக்கம்


ஆம்... தண்ணீர் கூட குடிக்கக்கூடாது. நீங்கள் ரமலானைக் கடைப்பிடித்தால், சூரியன் உதிக்கும் முன் நன்றாக தண்ணீர் அருந்தி, உங்கள் உடம்பை நீரேற்றம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் இஸ்லாமியர் அல்லாதவராக இருந்தால், உங்கள் இஸ்லாமிய நண்பர்கள் பகலில் கொஞ்சம் சிடுசிடுப்பாக இருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம். ஒருவேளை அவர்களுக்கு மிகவும் தாகமாக இருக்கலாம் அல்லவா!.


மேலும் படிக்க | சவுதி அரேபியாவில் ‘ரமலான்’ கட்டுப்பாடுகள்! அதிருப்தியில் உலக இஸ்லாமியர்கள்!


3. புகைபிடித்தல்


பகல் நேரங்களில் புகைபிடிப்பது கூடவே கூடாது. மேலும் அதில் இ-சிகரெட் மற்றும் ஷிஷாவும் அடங்கும். எனவே நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், இந்த மாதத்தை நல்ல பழக்கத்தை பழக ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள். எங்களை நம்புங்கள், உங்கள் நுரையீரல் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்.


4. உடலுறவு கொள்வது


ஆம், நீங்கள் படித்தது சரிதான். ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் பகல் நேரங்களில் பாலியல் ரீதியான எந்த ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது. எனவே நீங்கள் இஸ்லாமியராக இருந்தால், உங்கள் ஆன்மீக வளர்ச்சியில் கவனம் செலுத்தவும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு காதலை வெளிப்படுத்திக்கொள்ள இந்த மாதத்தைப் பயன்படுத்தவும். 


5. பொய்


உண்மையாக இருப்பது எப்போதும் நல்லது. ஆனால் குறிப்பாக ரமலான் காலத்தில் பொய் பேசுவது அனுமதிக்கப்படவில்லை. உங்கள் அன்பான இஸ்லாமிய நண்பர்களிடம் இருந்து சில உண்மைகளை பெற வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்.


மேலும் படிக்க | ரமலானில் பேலியோவைக் கடைப்பிடிப்பது எப்படி? - வழிகாட்டும் மருத்துவர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ