அறுவை சிகிச்சை செய்யும்போது மருத்துவர்கள் முகக்கவசம் அணிந்து இருப்பார்கள், அப்படித்தான் நாம் முன்பெல்லாம் முகக்கவசத்தை பார்த்திருக்கிறோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்றின் கடுமையான தாக்குதலால் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமான ஒன்றாக மாறியது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்ததால் பலரும் முகக்கவசம் அணிவதை கைவிட்ட நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தலைதூக்க தொடங்கியுள்ளதால் இப்போது முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது நோய் பரவாமல் இருக்க செய்யும் ஒரு முன்னெச்சரிக்கை என்றாலும், இது புகைப்பிடிப்பவர்களுக்கு ஒத்துவராத ஒன்றாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் ‘இந்த’ காய்கறிகளை உணவில் அவசியம் சேர்க்கவும்
புகைபிடிப்பவர்கள் முகக்கவசம் அணியும்போது அந்த நச்சுப்புகையானது வெளியே செல்லாமல் முகக்கவசத்திற்குள்ளேயே முடங்கி ஆபத்தை ஏற்படக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது. முகக்கவசத்தை அணிந்துகொண்டு புகைபிடிப்பதால், வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்சைடு மற்றும் இரத்த நாளங்களின் செயல்பாடு மாஸ்க் அல்லாத காலங்களுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகரிப்பு ஏற்படுகிறது என்று ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் கார்டியாலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண (எரியும்) சிகரெட்டுகள் மற்றும் எரியாத சிகரெட்டுகள் (மின்னணு முறையில் சூடேற்றப்பட்ட புகையிலை கொண்டவை) மீது இந்த ஆய்வு கவனம் செலுத்தியது. நிகோடின் கொண்ட திரவத்தை மின்னணு முறையில் சூடாக்கும் இ-சிகரெட்டுகள் இதில் இல்லை.
இந்த ஆய்வில் 40 வழக்கமான சிகரெட் புகைப்பவர்கள், 40 மின்னணு சிகரெட் பயன்படுத்துபவர்கள் மற்றும் 40 புகைப்பிடிக்காதவர்கள் உட்படுத்தப்பட்டனர். வேலை நேரத்திலும், முகக்கவசம் இல்லாத நாட்களிலும் முகக்கவசம் அணியும்போது புகைப்பிடிப்பவர்களில் வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்சைட்டின் அளவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். வழக்கமான சிகரெட் புகைப்பவர்களில், வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்சைடு ஒரு மில்லியனுக்கு 8.00 பாகங்களில் இருந்து 12.15 பிபிஎம் ஆகவும், முகக்கவசத்துடன் 17.45 பிபிஎம் ஆகவும் அதிகரித்தது. எரியாத சிகரெட் புகைப்பவர்களில், முகக்கவசம் இல்லாமல் 1.15 பிபிஎம்மில் இருந்து 1.43 பிபிஎம் ஆகவும், முகக்கவசத்துடன் 2.20 பிபிஎம் ஆகவும் உயர்ந்தது.
மேலும் படிக்க | 4 வாரத்தில் நரை முடி முற்றிலும் மறைய இயற்கை வைத்தியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR