Ramadan 2023: இந்தியாவில் ரமலான் பண்டிகை எப்போது? தேதி மற்றும் நேரம்!
Ramadan 2023 Date & Time: நோன்பு நேரத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை அவர்கள் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ அல்லது எச்சிலை கூட விழுங்கவோ மாட்டார்கள்.
Ramadan 2023 Date & Time: ஒவ்வொரு ஆண்டும், இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதத்தில் ரம்ஜான் அல்லது ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களால் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த புனித காலம் நம்பிக்கை, பிரார்த்தனை, பிரதிபலிப்பு மற்றும் சமூகத்தின் மாதமாக குறிக்கப்படுகிறது. ரமலான் பண்டிகைக்கு முன்பிலிருந்தே இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து இந்த புனிதமான பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நோன்பு நேரத்தில், மக்கள் சுஹூர் அல்லது செஹ்ரி சாப்பிடுவதற்கு அதிகாலையில் எழுந்திருப்பார்கள். இந்த நேரத்தில் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை, அவர்கள் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ, எச்சிலை கூட விழுங்க மாட்டார்கள். மாலையில் பேரீச்சம்பழம் சாப்பிட்டு அல்லது நோன்பு கஞ்சி சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நோன்பை விடுவார்கள். அனைத்து வகையான சுவையான உணவுகளையும் கொண்ட இப்தார் சடங்கை கடைபிடிக்கின்றனர்.
இந்த ஆண்டு, இந்தியாவில் ரம்ஜான் மார்ச் 22, 2023 புதன்கிழமை மக்கா மீது சந்திரனைப் பார்த்த பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ரமலான் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 21, 2023 அன்று முடிவடையும். மேலும் ஈத்-உல்-பித்ர் ஏப்ரல் 22, 2023 சனிக்கிழமை அன்று கொண்டாடப்படும், இருப்பினும் ஒவ்வொரு நாட்டிற்கும் தேதிகள் மாறுபடலாம். இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாய், பாக்கிஸ்தான் மற்றும் பல நாடுகளுக்கு ரமலான் எந்த தேதியில் தொடங்குகிறது என்பதை பற்றி பின்வருமாறு காண்போம்.
மேலும் படிக்க | உங்களை அம்பானியாக்கும் ‘இந்த’ பிங்க் நிற 20 ரூபாய் நோட்டு உங்க கிட்ட இருக்கா!
சவூதி அரேபியா:
சவூதி அரேபியாவில், ரமலான் மார்ச் 23-ம் தேதி தொடங்கும் என்றும், அதைத் தொடர்ந்து ஈத்-உல்-பித்ர் ஏப்ரல் 21ம் தேதி தொடங்கும்.
துபாய் மற்றும் அபுதாபி:
துபாய் மற்றும் அபுதாபியில் மார்ச் 23-ம் தேதி ரமலான் தொடங்குகிறது.
பாகிஸ்தான்:
பாகிஸ்தானில் மார்ச் 22-ம் தேதி ரமலான் பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது.
இந்தோனேசியா:
இந்தோனேசியாவில், ரமலான் மார்ச் 22, 2023 அன்றும், ஈத்-உல்-பித்ர் ஏப்ரல் 21, 2023 அன்றும் தொடங்கும்.
குவைத்:
குவைத்தில், ரமலான் மார்ச் 23, 2023 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து ஈத்-உல்-பித்ர் ஏப்ரல் 21, 2023 அன்று தொடங்கும்.
லெபனான்:
லெபனானில், ரமலான் மார்ச் 23 அன்று தொடங்கும், மேலும் ஈத்-உல்-பித்ர் ஏப்ரல் 21 அன்று தொடங்கும்.
மாலத்தீவுகள்:
மாலத்தீவில் ரம்ஜான் மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறது, ஈத்-உல்- பித்ர் ஏப்ரல் 21 அன்று தொடங்கும்.
மொராக்கோ:
மொராக்கோவில் ரமலான் மார்ச் 23-ம் தேதி தொடங்கும் என்றும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 21-ம் தேதி ஈத்-உல்-பித்ர் தொடங்கும்.
கத்தார்:
கத்தாரில், ரமலான் மார்ச் 23 அன்று தொடங்கும்.
தென்னாப்பிரிக்கா:
தென்னாப்பிரிக்காவில் ரம்ஜான் மார்ச் 22-ம் தேதி தொடங்கும்.
துருக்கி:
துருக்கியில், மார்ச் 23 அன்று ரமலான் தொடங்கும், ஈத்-உல்-பித்ர் ஏப்ரல் 21 அன்று தொடங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ