கொரோனா காலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு (TN Lockdown) வரும் 21ம் தேதி முடிய நடைமுறைப்படுத்த அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா நிவாரணமாக (Corona Relief) ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் 7 ஆம் தேதி கொரோனா நிவாரணமாக (Corona Relief) ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் நிவாரணம் ரே‌ஷன் கடைகளில் (Ration Shops) வழங்கப்பட்டது.


ALSO READ | ரேஷன் கடைகளில் அளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்களின் முழு விவரம்


இரண்டாவது முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவியுடன் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இந்த திட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாவது தவணையாக இரண்டாயிரம் ரூபாய் ஆகியவை நியாயவிலைக் கடைகள் மூலம் நேற்று முதல் வழங்கப்படுகிறது. 


இந்நிலையில் இனி வரும் மாதங்களில் உங்களுக்கும் ரேஷன் வழியாக இந்த உதவிகள் பெற வேண்டுமானால் ஆன்லைனில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்வது எப்படி என்று பார்போம்.,


* முதலாவதாக இதற்காக https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தினை லாகின் செய்யவும். அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை கிளிக் செய்யவும்.


ALSO READ | Ration Update: ரூ.2000 மளிகைப் பொருட்கள் தொகுப்பு இன்று முதல் விநியோகம்


* அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு Name of family head என்ற பாக்ஸின் கீழ், ஆங்கிலத்திலும், தமிழிலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.


* அதன் பிறகு மற்ற விவரங்களை கொடுக்க வேண்டும். குறிப்பாக முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களது மொபைல் எண், மெயில் ஐடி என பலவற்றையும் சரியாக கொடுக்கவும்.


* அதோடு அப்ளிகேஷனில் குடும்ப தலைவருக்கான புகைப்படம் என்ற இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 5 எம்பி அளவில் இருக்க வேண்டும்.


* இதன் பிறகு அட்டை தேர்வு என்ற பாக்ஸில் என்ன அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்யவும்.


* அடுத்ததாக உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும்.


* கடைசியாக ஸ்கேன் செய்து ஆதாரினை அப்லோட் செய்ய வேண்டும். அப்லோட் செய்த பிறகு உறுப்பினர் சேர்க்கை சேமி என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.


* அதில் குடும்ப விவரங்களை முழுமையாக பதிவிட்டு, ஆதார் கார்டினை பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தை எனில் பிறப்பு சான்று கொடுத்தால் போதுமானது. அதனையும் பதிவேற்றம் செய்து, உறுப்பினர் சேர்க்கை சேமி என்பதை கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளலாம்.


* அதன் பிறகு உங்கள் விவரங்கள் சரியானதா என்பதை பார்த்து, பதிவு செய் என்பதை கொடுங்கள். நீங்கள் கொடுத்த விவரத்தில் ஏதேனும் தவறு இருந்தால், அது ரெட் கலரில் காண்பிக்கும். இதை சரியாக கொடுத்து பதிவு செய்யுங்கள். அதன்பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானவை எனில் உறுதிசெய் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.


* அதன் பிறகு உங்களது மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது என வரும். அதில் குறிப்பு எண்ணும் வரும். அதனை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை வைத்து தான் உங்களது கார்டின் நிலையை அவ்வப்போது பார்க்க முடியும். இதனை கொடுத்த பிறகு உங்களது ஆதார் கார்டு, போட்டோ, அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றை தாலூகா அலுவலகத்தில்(TSO) கொடுக்க வேண்டும். ஏனெனில் விரைவில் உங்களது அப்ளிகேஷன் விரைவில் பரிசீலிக்கப்படும்.


*  இதே இணையத்தில் முகப்பு பக்கத்தில் உங்களது விண்ணப்பத்தின் நிலையை பார்த்துக் கொள்ள முடியும். நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும்.


ALSO READ | Ration Shops Timing: ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் புதிய மாற்றம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR