நாட்டின் ஏழை பிரிவினருக்கு உதவும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து பல திட்டங்களை கொண்டு வருகிறது. அவற்றில் ஒன்று பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமாகும். இதன் கீழ் நாட்டின் ஏழை மக்களுக்கு இலவச அரிசி, கோதுமை, ரேஷன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் பயன் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் தற்போது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கிடைக்கும் கோதுமை மற்றும் அரிசி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அதன்படி அரசு கோதுமைக்கான ஒதுக்கீட்டை குறைத்து, தற்போது அரிசிக்கான ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளது. சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த மாற்றம் முன்னதாகவே செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, இந்த மாநிலங்களின் மக்களுக்கு முன்பை விட குறைவான கோதுமையும், அதிக அளவு அரிசியும் வழங்கப்படும். 


மேலும் படிக்க | Ration Card: மக்களே உஷார், இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது


இந்த மாநிலங்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை
இதற்கிடையில் மே முதல் செப்டம்பர் வரை பல மாநிலங்களில் கிடைக்கும் கோதுமை ஒதுக்கீட்டில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கோதுமை ஒதுக்கீட்டை குறைத்து அரிசி விநியோத்தை அதிகரித்து வழங்க அரசு முடிவு செய்துள்ளது.


இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன
மத்திய அரசின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் இம்முறை அரசு கோதுமை கொள்முதலை மிகவும் குறைவாகவே செய்யப்பட்டது தான். அதன்படி மே 1 ஆம் தேதி நிலவரப்படி, அரசாங்க நிறுவனங்களின் கோதுமை கொள்முதல் ஆண்டுக்கு 42% குறைந்து 16.19 மெட்ரிக் டன்னாக உள்ளதால், இந்திய உணவுக் கழகத்திடம், தானியங்களின் இருப்பு மே 1 அன்று ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு 31 மெட்ரிக் டன்னாகக் குறைந்துள்ளது. இதனால் மக்களிடையே அரிசி விநியோகிக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்றால் என்ன
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனா உதவியுடன் நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனாவின் கீழ், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்கப்பட்டது.


மேலும் படிக்க | அடுத்த 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வேண்டுமானால் இத பண்ணுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR