அடுத்த 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வேண்டுமானால் இத பண்ணுங்க

'ஒரே கார்டு, ஒரே நாடு' திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ரேஷன் கார்டில் இருந்து நாடு முழுவதும் எந்த மாநிலத்தின் எந்த மாவட்டத்திலும் ரேஷன் பெற்றுக்கொள்ளலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 27, 2022, 10:11 AM IST
  • ஆஃப்லைன்/ஆன்லைன் இல் ரேஷன் கார்டை லிங்க் செய்யலாம்
  • ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி
  • ஆஃப்லைனில் ஆதாரை இணைப்பது எப்படி
அடுத்த 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வேண்டுமானால் இத பண்ணுங்க title=

கொரோனா நோய்த் தொற்றின் போது, ​​ஏழைக் குடும்பங்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. உண்மையில் கொரோனா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் வேலையில்லாத மக்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி அரசின் அறிவிப்பின்படி, இந்தத் திட்டம் செப்டம்பர் 2022 வரை தொடரும்.

ஆஃப்லைன்/ஆன்லைன் இல் ரேஷன் கார்டை லிங்க் செய்யலாம்
ரேஷன் கார்டு வைத்துள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சில காரணங்களால் ஆதாருடன் இணைக்க முடியவில்லை. உங்களால் இன்னும் உங்கள் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க முடியவில்லை என்றால், இந்த செயல்முறையை விரைவில் முடிக்கவும். இந்த செயல்முறையை நீங்கள் ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் செய்யலாம்.

மேலும் படிக்க | Ration Card புதிய விதி, உடனடியாக இதை செய்யுங்கள், இல்லையெனில் சிக்கல் தான் 

ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி
* முதலில் ஆதார் இணையதளமான uidai.gov.in க்குச் செல்லவும்.
* பின்னர் "இப்போது தொடங்கு" என்பதைக் கிளிக் செய்யவும்.
* மாவட்டம், மாநிலம் உள்பட உங்கள் முழு முகவரியை உள்ளிடவும்
* பின்னர் "ரேஷன் கார்டு" என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்
* ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்
* உங்கள் ரேஷன் கார்டு எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண்ணை உள்ளிடவும்
* படிவத்தில் நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபி ஐ உள்ளிடவும்
* அதன் பிறகு, விண்ணப்பித்தல் வெற்றிகரமாக இருந்தது என்பதை திரை அறிவிப்பு உங்களுக்குத் தெரிவிக்கும்
* உங்கள் விண்ணப்பம் உடனடியாக சரிபார்க்கப்படும். வழங்கப்பட்ட விவரங்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்கள் ஆதார் அட்டை உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று உங்களுக்குத் தெரிவிக்கும் அறிவிப்பைப் பெறுவீர்கள்.

ஆஃப்லைனில் ஆதாரை இணைப்பது எப்படி
ஆதார் அட்டைகளின் நகல் மற்றும் உங்கள் ரேஷன் அட்டையின் புகைப்பட நகலையும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வங்கிக் கணக்குடன் உங்கள் ஆதார் அட்டையை இணைக்கவில்லை என்றால், உங்கள் வங்கிக் பாஸ்புக்கின் நகலைப் பெறவும். குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தையும் எடுத்து, இந்த ஆவணங்களை ரேஷன் அலுவலகம் அல்லது பொது விநியோக அமைப்பு கடையில் சமர்ப்பிக்கவும். ஆதார் தரவுத்தளத்துடன் நீங்கள் கொடுத்த தகவல்களை சரிபார்க்க, உங்கள் கைரேகை அங்கீகரிக்க சம்பந்தபட்ட அலுவலர் கேட்கலாம், தொடந்து ஆவணங்கள் சம்பந்தப்பட்ட துறையை அடைந்ததும், எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அலுவலர்கள் உங்கள் ஆவணங்களை சரிபார்த்ததும், ரேஷன் கார்டு வெற்றிகரமாக ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும். 

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் விதிகளை மாற்றும் மத்திய அரசு! இனி இதுலாம் கிடைக்குமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News