ரேஷன் கடைகளில் சிசிடிவி: ரேஷன் கடைகளின் மூலம் அரசு அளிக்கும் மலிவு விலை பொருட்களை வாங்கி பயனடையும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ரேஷன் கடை செயல்முறையை முற்றிலும் மாற்ற அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது ரேஷன் கடைகளை சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது தவிர, ஹெல்ப்லைன் எண் அமைப்பும் முன்பை விட சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் நாடாளுமன்ற குழு இதை பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் ரேஷன் பொருட்களின் வழங்கலில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திடீர் ஆய்வு முறை பரிந்துரைக்கப்படுகிறது!


நாடாளுமன்றத்தின் நிலைக்குழு ஒன்று, பொது விநியோகத் திட்டத்தின் (பி.டி.எஸ்) பயனாளிகளின் குறைகளைத் தீர்ப்பதற்கும், ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் மற்றும் கறுப்பு சந்தைப்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கும் 'ஹெல்ப்லைன் எண்' அமைப்பை மேம்படுத்துவதற்காக சிசிடிவி கேமராக்களை பொருத்த பரிந்துரைத்துள்ளது. உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, ரேஷன் கடைகளை கண்காணிக்க சுதந்திரமான திடீர் ஆய்வுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.


மேலும் படிக்க | உங்க ரேஷன் கார்டுக்கு ஆபத்து; புதிய ரூல்ஸ் தெரிஞ்சிகோங்க 


பயனாளிகள் புகார் நிறுவனத்தை அணுக முடியவில்லை


இந்தக் குழு, ஜூலை 19 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், “எஃப்சிஐ குடோன்களில் உணவு தானியங்களை கூட்டாக ஆய்வு செய்தாலும், உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு இருந்தபோதிலும், தரம் குறைந்த உணவு தானியங்கள் குறித்து பயனாளிகளிடமிருந்து  புகார்கள் பெறப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளது. இது சில இடைத்தரகர்களின் கைவரிசையாக இருக்கலாம் என அறிக்கை கூறுகிறது. அப்படிப்பட்டவர்கள் நல்ல தரமான உணவு தானியங்களை ரேஷன் கடைகளுக்குப் பதிலாக 'வேறு இடங்களுக்கு' கொண்டு செல்கிறார்கள். இதன் காரணமாக உண்மையான தேவையில் இருக்கும் ஏழை மக்கள் தரம் குறைந்த பொருட்களைப் பெறுகிறார்கள். சில சமயங்களில் பயனாளிகள் தங்கள் குறைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவிக்க முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலமுறை அழைத்தும் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை
1967 மற்றும் 1800 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பல்வேறு மாநிலங்களில் 24 மணி நேரமும் குறை தீர்க்கும் முறை உள்ளது என்று குழு தெரிவித்துள்ளது. ஆனால், பயனாளிகளின் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் இந்த எண்கள் மூலம் பலன் கிடைப்பதில்லை. அந்த அறிக்கையில், 'இந்த இலவச எண்கள் பயனாளிகளின் தேவைக்கேற்ப செயல்படவில்லை என்பதும், பெரும்பாலான நேரங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழைப்புகளை எடுப்பதில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.' என்று கூறப்பட்டுள்ளது.


இந்த 'ஹெல்ப்லைன் எண்களின்' சரியான செயல்பாடு பொது விநியோக முறையை (PDS) செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொது பொறுப்புணர்வை மேம்படுத்தும் என்று குழு கூறியது. மாநில அரசுகள் இந்த ஹெல்ப்லைன் எண்ணின் செயலாக்கத்தை வலுப்படுத்தி, ரேஷன் கடைகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். தரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் விரிவான தரக் கட்டுப்பாட்டுக் கலத்தை அமைக்கவும் அறிக்கை பரிந்துரைத்தது.


மேலும் படிக்க | Ration Card வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி, இந்த வசதி கிடைக்கும்