RBI உத்தரவினை கடைப்பிடிக்காத credit card நிறுவனங்களின் சேவை நாளை முதல் இயங்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Facebook, Mastercard, Visa, American Express, PayPal, Amazon, Microsoft போன்ற சர்வதேச நிதிச் சேவை நிறுவனங்கள், இந்தியாவில் திரட்டும் தகவல்களை இந்தியாவிலேயே சேமிக்க வேண்டும் என RBI  அளித்த உத்தரவிற்கு இன்று கடைசி நாள் என்பதால், இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் இந்தியாவில் சேமிக்காத சர்வதேச நிதிச் சேவை நிறுவனங்களின் செயல்பாடு நாளை முதல் தடைப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


சர்வதேச நிதிச் சேவை நிறுவனங்கள் தங்களது இந்திய செயல்பாடுகளின்போது திரட்டும் தகவல்களை இந்தியாவிலேயே சேமிக்க வேண்டும் எனவும், இதற்கான கட்டமைப்பினை ஆறு மாதத்திற்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் RBI அறிவித்து இருந்தது. இந்த செயல்பாட்டிற்கு இன்று(அக்., 15) வரை காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது.


இந்த கால அவகாசத்தை நீட்டிக்க சர்வதேச நிதிச்சேவை நிறுவனங்கள் கோரிக்கை வைத்தது, ஆனால் இந்த கோரிக்கையினை ஏற்க RBI மறுத்துள்ளது. பொது நலன் கருதி இந்த நடைமுறையினை கட்டாயப் படுத்தவேண்டும் என்று RBI குறிப்பிட்டுள்ளது. இந்த செயல்பாட்டினால் தகவல்திருட்டு என்பது ஒழிக்கப்படும் என RBI நம்புகின்றது.


முன்னதாக Whatsapp நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Whatsapp payment வசதியில் இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்களை இந்தியாவிலேயே சேமிக்க முயற்சிகள் மேற்கொண்டது. இதன் காரணமாகவே சர்வதேச நிதிச்சேவை நிறுவனங்களுக்கு இந்த கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


RBI-ன் இந்த புதிய கட்டுப்பாட்டினை உள்நாட்டு நிதிச் சேவை நிறு வனங்கள் வரவேற்றுள்ளன. எனினும் சர்வதேச நிதிச் சேவை நிறுவனங்கள் இந்தியாவில் இதற்கான செலவுகள் அதிகரிக்கும் என்பதால் தயக்கம் காட்டி வருகின்றன. 


RBI -ன் காலக்கெடு இன்றோடு முடிவடையும் நிலையில், RBI-ன் உத்தரவினை பின்பற்றாத நிதிசேவை நிறுவனங்களின் செயல்பாடு நாளை முதல் நிறுத்தப்படும். தகவல் சேமிப்பு பிரச்சனையின் காரணமாக இந்தியாவில் தினசரி நிகழும் பறிமாற்றங்கள் பெருமளவில் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்ககது!