RBI New Rule: Cheque கொடுக்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள், மீறினால் அபராதம்!!
நேஷனல் ஆடோமேடிக் க்ளியரிங் ஹவுஸ் (NACH) இனி 24 மணி நேரமும் செயல்படும் என்ற பெரிய முடிவை RBI எடுத்துள்ளது. இந்த புதிய விதி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கும் பொருந்தும்.
RBI New Rule: காசோலை மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கும், பண பரிமாற்றம் செய்பவர்களுக்கும் ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. இப்போது தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ ஒரு காசோலை கொடுப்பதற்கு முன், RBI இன் புதிய விதிகளை கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
ரிசர்வ் வங்கி (RBI) ஆகஸ்ட் 1 முதல் வங்கி விதிகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேஷனல் ஆடோமேடிக் க்ளியரிங் ஹவுஸ் (NACH) இனி 24 மணி நேரமும் செயல்படும் என்ற பெரிய முடிவை RBI எடுத்துள்ளது. இந்த புதிய விதி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கும் பொருந்தும்.
காசோலை கொடுக்கும் முன் இந்த விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்
இந்த புதிய விதியின் கீழ், இப்போது உங்கள் காசோலையை விடுமுறையில் கூட க்ளியர் செய்ய முடியும். ஆனால் இத்தகைய சூழ்நிலையில், இப்போது நீங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், சனிக்கிழமையன்று வழங்கப்பட்ட காசோலையை இப்போது ஞாயிற்றுக்கிழமையும் க்ளியர் செய்ய செய்ய முடியும்.
அதாவது, காசோலையின் க்ளியரிங்கிற்காக (Cheque Clearance) நீங்கள் எப்போதும் உங்கள் கணக்கில் ஒரு இருப்பு வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டால் நீங்கள் அபராதத்தை கட்ட நேரிடும். முன்னதாக, காசோலை முன்னரே வழங்கப்பட்டாலும், விடுமுறை நாட்கள் இடையில் வந்தால், அதன் பிறகுதான் செக் க்ளியர் ஆகும். ஆனால், இப்போது காசோலை விடுமுறை நாட்களிலும் க்ளியர் ஆகும்படி வழிமுறை செய்யப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களிலும் சம்பளம், ஓய்வூதியம், இஎம்ஐ -க்கான வசதி
NACH என்பது இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தால் (NPCI) இயக்கப்படும் ஒரு மொத்த கட்டண முறைமை ஆகும். இது டிவிடெண்ட், வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற பல்வேறு வகையான கடன் பரிமாற்றங்களை எளிதாக்குகிறது. இது தவிர, மின்சார கட்டணம், எரிவாயு, தொலைபேசி, நீர், கடன் இஎம்ஐ, மியூசுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் காப்பீட்டு பிரீமியம் செலுத்துதல் ஆகிய வசதிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த விதி மாற்றத்துக்கு பிறகு, இனி இந்த வசதிகளை பெற, திங்கள் முதல் வெள்ளி வரை, அதாவது Week Days-க்காக காத்திருக்க வேண்டியதில்லை. இந்த பணிகள் வார இறுதி நாட்களிலும் செய்யப்படும்.
ALSO READ: Good News for ATM users! ஏடிஎம்மில் பணமில்லையா? வங்கி மீது RBI நடவடிக்கை எடுக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR