RBI New Rule: செக் பரிவர்த்தனையின் புதிய விதிகள்; மீறினால் அபராதம் விதிக்கப்படும்..!!

காசோலை மூலம் பணம் செலுத்துவது தொடர்பாக RBI  அறிவித்துள்ள புதிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.  இல்லையெனில் அபராதம் செலுத்த நேரிடலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 16, 2021, 11:37 AM IST
  • ரிசர்வ் வங்கி சில வங்கி விதிகளை மாற்றியுள்ளது
  • இந்த விதிகள் காசோலை செலுத்துவதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்
  • காசோலை பவுன்ஸ் ஆனால் அபராதமும் விதிக்கப்படும்.
RBI New Rule: செக் பரிவர்த்தனையின் புதிய விதிகள்; மீறினால் அபராதம் விதிக்கப்படும்..!! title=

புதுடெல்லி: காசோலை மூலம் பணம் செலுத்துவது தொடர்பாக RBI  அறிவித்துள்ள புதிய விதிகள் இந்த மாத தொடக்கத்திலிருந்து அதாவது ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. எனவே, நீங்கள் காசோலை மூலம் பணம் செலுத்தப் போகிறீர்கள் என்றால், இந்த விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

காசோலை தொடர்பான புதிய வங்கி விதிகள் 

தேசிய தானியங்கி கட்டணம் செலுத்தும் முறைமையான (National Automated Clearing House - NACH) விதிகளை RBI திருத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி இப்போது 24 மணி நேர காசோலை பரிவர்த்தனை அதாவது, செக் கிளியரிங் (Cheque Clearing) வசதியைத் தொடர முடிவு செய்துள்ளது. முன்னர் செக் கிளீயரன்ஸ் 2 நாட்கள் ஆகும், ஆனால் திருத்தப்பட்ட விதியின் கீழ் நீங்கள் கொடுத்த செக் உடனடியாக கிளியரிங்க்கிறகு செல்லும் என்பதால், வங்கி கணக்கு இருப்பு தொகையில் கவனம் தேவை.  

எனவே, நாளை வங்கிக் கணக்கிற்கு பணத்தை வரும் என கணக்கிட்டு, இன்றே  ஒரு செக்கை (Cheque)கொடுக்கிறீர்கள் என்றால், உங்கள் காசோலை பவுன்ஸ் ஆகலாம். அதனால் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே காசோலை வழங்கும் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலில் உங்கள் வங்கிக் கணக்கை சரிபார்த்து பின்னர் காசோலையை வழங்கவும்.

ALSO READ | Single Use Plastic Ban: தடை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் முழு பட்டியல்..!!

 

இப்போது விடுமுறை நாட்களில் கூட செக் கிளியரிங் உண்டு 

தேசிய தானியங்கி கட்டணம் செலுத்தும் முறைமையான (National Automated Clearing House) NACH இனி 24 மணி நேரமும் செயல்பட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த விதி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கும் பொருந்தும். இந்த புதிய விதியின் கீழ், இப்போது உங்கள் காசோலை பரிவர்த்தனை (Cheque Clearing) வசதி விடுமுறையில் கூட உண்டு. ஆனால் அத்தகைய சூழ்நிலையில், இப்போது நீங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், இப்போது சனிக்கிழமை கொடுத்த காசோலை ஞாயிற்றுக்கிழமையும்  கிளியர் ஆகும். 

NACH விதிகள் மாற்றம்

ரிசர்வ் வங்கி (RBI), ஜூன் மாதம் வெளியிட்ட கடன் கொள்கையில், வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்துவதற்காகவும், RTGS வசதியை 24x7 கிடைக்கச் செய்வதற்காகவும், தற்போது வங்கி வேலை நாட்களில் மட்டுமே கிடைக்கும்  NACH சேவைகள்,  இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்க  மற்றப்பட்ட விதிகள் ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ | Vehicle Scrappage Policy: பழைய வாகன உரிமையாளர்களுக்கு பல சலுகைகள் ..!!

NACH என்றால் என்ன

NACH, அதாவது தேசிய தானியங்கி கட்டணம் செலுத்தும் முறைமையான (National Automated Clearing House - NACH) என்பது, இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தால் (NPCI) இயக்கப்படும் கட்டண முறைமை ஆகும். இது டிவிடெண்ட், வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற பல்வேறு வகையான கடன் மற்றும் நிதி பரிமாற்றங்களை எளிதாக்குகிறது. இது தவிர, மின்சார கட்டணம், எரிவாயு, தொலைபேசி, நீர், கடன் இஎம்ஐ, பரஸ்பர நிதி முதலீடு மற்றும் காப்பீட்டு பிரீமியம் செலுத்துதல் ஆகிய வசதிகளும் வழங்கப்படுகின்றன

முன்னதாக, ஜனவரி 1, 2021 முதல், காசோலை மூலம் பணம் செலுத்துவதற்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன, இதன் கீழ் மக்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தும்போது இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும். காசோலை கொடுப்பதில் மோசடியை தடுக்க மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுத்தது.  இந்த விதியின் கீழ் காசோலை தேதி, பணம் செலுத்தும் நபரின் பெயர், பணம் பெறுபவரின் விவரங்கள் மற்றும் தொகை ஆகிய தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும். இந்த தகவலை SMS, மொபைல் செயலி, இணைய வங்கி அல்லது ATM போன்ற மின்னணு வழிமுறைகள் மூலம் வழங்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News