Bank Locker Rule Change: லாக்கர் பயன்படுத்துவோருக்கு முக்கிய செய்தி, இந்த பிரச்சனை ஏற்படலாம்

ரிசர்வ் வங்கி (RBI) பாதுகாப்பான வைப்பு லாக்கர்கள் தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 23, 2021, 01:29 PM IST
Bank Locker Rule Change: லாக்கர் பயன்படுத்துவோருக்கு முக்கிய செய்தி, இந்த பிரச்சனை ஏற்படலாம் title=

புதுடெல்லி: மக்கள் பொதுவாக தங்களுடைய நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வங்கி லாக்கரில் வைத்திருப்பது வழக்கம். விலை உயர்ந்த தங்கம், வெள்ளி நகைகள், ஆவணங்கள் அகியவற்றின் பாதுகாப்பு கருதி, வங்கி லாக்கர்களில் இவை வைக்கப்படுகின்றன.

வங்கிகளை ஒப்பிடுகையில், வீடுகளில் திருட்டு மற்றும் இழப்புக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இப்போது இந்த லாக்கர் வசதியில் பிரச்சனைகள் வரக்கூடும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் நீண்ட காலத்துக்கு லாக்கரை இயக்கவில்லை என்றால், வங்கிகள் அவர்களது லாக்கரை திறக்கக்கூடும்.

வங்கிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

ரிசர்வ் வங்கி (RBI) பாதுகாப்பான வைப்பு லாக்கர்கள் தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதலில், லாக்கரை நீண்ட நேரத்திற்கு வாடிக்கையாளர் திறக்கவில்லை என்றால், வங்கிகள் லாக்கரை திறக்கலாம் என  அனுமதிக்கப்பட்டுள்ளது. வாடகை முறையாக செலுத்தப்பட்டாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆர்பிஐ செய்துள்ள திருத்தம்

வங்கி (Bank) மற்றும் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள், நுகர்வோர் புகார்களின் தன்மை மற்றும் வங்கிகள் மற்றும் இந்தியன் வங்கிகள் சங்கம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட பின்னூட்டங்களைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி சமீபத்தில் பாதுகாப்பான வைப்பு லாக்கர்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது. செயல்படாத வங்கி லாக்கர்கள் குறித்து புதிய விதிகளை அளித்துள்ளது.

ALSO READ: Acts of God: புதிய வங்கி லாக்கர் விதிகளின்படி, பொருட்கள் தொலைந்தால் வங்கியின் பொறுப்பு வரையறுக்கப்பட்டது

லாக்கர் வங்கியை திறக்க முடியும்

திருத்தப்பட்ட ஆர்பிஐ வழிகாட்டுதல்கள், வங்கி லாக்கரை திறக்கவும் லாக்கரின் உள்ளடக்கங்களை அதன் நியமனதாரர்/சட்டப்பூர்வ வாரிசுக்கு மாற்றவும், பொருட்களை வெளிப்படையான முறையில் அகற்றவும், வங்கிகளுக்கு உரிமையை அளிக்கின்றன. லாக்கர் 7 வருடங்கள் வரை செயலற்ற நிலையில் இருந்தால், இந்த லாக்கருக்கான வாடகை செலுத்தப்பட்டாலும், வாடகை செலுத்துவோரின் அடையாளத்தை கண்டறிய முடியாது. ஆனால் பொது நலனைப் பாதுகாக்கும் விதத்தில், லாக்கரை வங்கியே திறக்கும் முன்னர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது.

லாக்கர் வைத்திருப்பவரை வங்கி எச்சரிக்கும்

வங்கி, லாக்கர்-வாடகைதாரருக்கு ஒரு கடிதம் மூலம் அறிவிப்பை அளிக்கும் என்றும், மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் தொலைபேசி எண்ணுக்கு மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கைகள் அனுப்பப்படும் என்றும் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதம் டெலிவரி செய்யப்படாமல் திரும்பப் பெறப்பட்டாலோ, அல்லது லாக்கர் (Locker) வாடகைக்கு எடுத்தவர் கண்டுபிடிக்கப்படாவிட்டாலோ, லாக்கரை வாடகைக்கு எடுத்தவருக்கு அல்லது லாக்கரின் உள்ளடக்கத்தில் ஆர்வமுள்ள வேறு எந்த நபருக்கும் பதிலளிக்க வங்கி நியாயமான நேரத்தை அளிக்கும். செய்தித்தாள்களில் (ஆங்கிலத்தில் ஒன்று, உள்ளூர் மொழியில் ஒன்று) பொது அறிவிப்பும் வெளியிடப்படும்.

லாக்கரை திறக்க வழிகாட்டுதல்கள்

வங்கியின் அதிகாரி மற்றும் இரண்டு சுயாதீன சாட்சிகளின் முன்னிலையில் லாக்கரைத் திறக்க வேண்டும்.  முழு செயல்முறையும் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று மத்திய வங்கியின் வழிகாட்டுதல்கள் மேலும் கூறுகின்றன. லாக்கரைத் திறந்த பிறகு, வாடிக்கையாளரால் உரிமை கோரப்படும் வரை உள்ளடக்கங்கள் ஒரு பாதுகாப்பான பெட்டியில், அழிக்கப்படாத வகையில், ஒரு உறையில் வைக்கப்படும் என்று RBI மேலும் கூறியது.

ALSO READ:Bank Locker: வங்கி லாக்கரை பயன்படுத்துபவரா; மாறியுள்ளது முக்கிய விதிகள்; முழு விபரம்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News